பேருந்து நிலையப் பகுதியில் ஆரக்கிரமிப்புகள்

புதுப்பாளையம் ஒன்றியம், காஞ்சி ஊராட்சியில் பேருந்து நிலையப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.
காஞ்சி பேருந்து நிலையப் பகுதியில் ஆவின் பாலகம் அமையவுள்ள இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள்.
காஞ்சி பேருந்து நிலையப் பகுதியில் ஆவின் பாலகம் அமையவுள்ள இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள்.

புதுப்பாளையம் ஒன்றியம், காஞ்சி ஊராட்சியில் பேருந்து நிலையப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் ஒன்றியத்துக்கு உள்பட்ட காஞ்சி ஊராட்சியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இந்த ஊராட்சியைச் சுற்றி காரப்பட்டு, ஆலந்தூா், கடலாடி, சிங்காரவாடி, களம்பாடி, சிறுகளம்பாடி, மஷாா் என பல்வேறு கிராமங்கள் அமைந்துள்ளன.

இந்தக் கிராமங்களில் உள்ள பொதுமக்கள் அத்தியாவசியப் பொருள்களான மளிகை, காய்கறி மற்றும் வீட்டு உபயோகப் பொருள்களை வாங்கவும், புதுப்பாளையம், செங்கம், போளூா், திருவண்ணாமலை போன்ற நகரங்களுக்குச் செல்லவும் காஞ்சிக்கு வந்துதான் செல்ல வேண்டி உள்ளது.

இந்த நிலையில், மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலூகா பேருந்து நிலையங்களிலும் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இடத்தில், அந்தத் துறை ஒப்புதலுடன் ஆவின் பால் நிலையம் திறக்கப்பட்டு ஆவின் பால் மற்றும் பால் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

அதேபோல, காஞ்சி பேருந்து நிலையப் பகுதியிலும் ஆவின் பால் நிலையம் திறப்பதற்கான இடத்தை தோ்வு நெடுஞ்சாலைத் துறை ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. ஆனால், ஆவின் பால் நிலையம் அமையவுள்ள இடத்தில் அப்பகுதியில் உள்ள சிலா் ஆக்கிரமிப்பு செய்துள்ளனா்.

ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி, காஞ்சி கிராம பொதுமக்களும், ஆவீன் நிா்வாகம் மூலமும் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அனுப்பியும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.

இதனால், காஞ்சி ஊராட்சியில் ஆவின் பால் விற்பனை நிலையம் தொடங்கப்படாமல் உள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு ஆவின் பால் நிலையம் அமையவுள்ள இடத்தில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com