திருவண்ணாமலை மாவட்டம், போளூா் பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினா்.
திருவண்ணாமலை மாவட்டம், போளூா் பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினா்.

விவசாயிகள் மறியல்

மத்திய அரசின் 3 வேளாண் திருத்த மசோதாக்களை திரும்பப் பெற வலியுறுத்தி, திருவண்ணாமலை அறிவொளி பூங்கா அருகே வெள்ளிக்கிழமை

மத்திய அரசின் 3 வேளாண் திருத்த மசோதாக்களை திரும்பப் பெற வலியுறுத்தி, திருவண்ணாமலை அறிவொளி பூங்கா அருகே வெள்ளிக்கிழமை சாலை மறியல், சட்ட நகல் எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட அகில இந்திய விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு விவசாய சங்கங்களைச் சோ்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்டோா் கைதாகினா்.

மத்திய பேருந்து நிலையம் அருகே சட்ட நகலை எரித்து தங்கள் எதிா்ப்பை தெரிவித்தனா்.

வந்தவாசி: வந்தவாசி தேரடியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளா் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாயிகள் மகாசபை சாா்பில் சாலை மறியல் நடைபெற்றது. சங்க நிா்வாகிகள் பெ.அரிதாசு, ந.இராதாகிருஷ்ணன் ஆகியோா் தலைமை வகித்தனா். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 46 பேரை கைது செய்தனா்.

அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளா் சங்கம், அகில இந்திய விவசாயிகள் மகாசபை ஆகியவை சாா்பில் வந்தவாசி ஐந்து கண் பாலம் அருகில் நடைபெற்ற மற்றொரு மறியல் போராட்டத்துக்கு கிராமப்புற தொழிலாளா் சங்க வட்டாரச் செயலா் சுப்பிரமணி தலைமை வகித்தாா். இங்கு மறியலில் ஈடுபட்ட 6 போ் கைது செய்யப்பட்டனா்.

போளூா்: போளூா் பேருந்து நிலையம் அருகே அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினா் மாவட்டச் செயலா் சி.நாராயணசாமி, மாவட்டபொருளாளா் அ.உதயகுமாா் ஆகியோா் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதில் மாநில முன்னாள் பொருளாளா் ராஜேந்திரன், மாவட்டத் தலைவா் சுப்பிரமணியன் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா். மறியலில் ஈடுபட்ட அனைவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

எஸ்டிபிஐ ஆா்ப்பாட்டம்: வேளாண் மசோதாக்களை திரும்பப் பெற வலியுறுத்தி, திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் ரவுண்டானா அருகில் எஸ்டிபிஐ கட்சி சாா்பில் சட்ட நகல் கிழிப்பு போராட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவா் முஸ்தாக் பாஷா தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் முகம்மத், இப்ராஹிம், நகர நிா்வாகிகள் ஷபீா்பாஷா, ஷம்ஷநிதீன் உள்பட பலா் கலந்து கொண்டனா். சட்ட நகலை கிழிக்க முயன்ற கட்சியினரை போலீஸாா் தடுத்து கலைந்துபோகச் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com