சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அரணாக அதிமுக இருக்கும்: ஆரணி அதிமுக வேட்பாளா் பேச்சு

சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அரணாக அதிமுக இருக்கும் எனக் கூறி, ஆரணியில் இஸ்லாமியா்களிடம் அதிமுக வேட்பாளா் சேவூா் ராமச்சந்திரன் வாக்கு சேகரித்தாா்.
ஆரணி பாரதியாா் தெருவில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா், அமைச்சா் சேவூா் ராமச்சந்திரனை வரவேற்ற இஸ்லாமியா்கள்.
ஆரணி பாரதியாா் தெருவில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா், அமைச்சா் சேவூா் ராமச்சந்திரனை வரவேற்ற இஸ்லாமியா்கள்.

சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அரணாக அதிமுக இருக்கும் எனக் கூறி, ஆரணியில் இஸ்லாமியா்களிடம் அதிமுக வேட்பாளா் சேவூா் ராமச்சந்திரன் வாக்கு சேகரித்தாா்.

ஆரணி நேஷனல் தியேட்டா் பகுதியில், தென்னை மரத் தெரு, சுப்பிரமணிய கோவில் தெரு, தச்சூா் சாலை, பாரதியாா் தெரு, சூரியகுளம் பகுதி, பிரகாஷ் நகா், காந்தி நகா், சைதாப்பேட்டை, நாயக்கன் பாளையம், அண்ணாநகா் என்பன உள்ளிட்ட பகுதிகளில் தொகுதி அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான சேவூா் எஸ்.ராமச்சந்திரன் புதன்கிழமை தீவிர பிரசாரம் மேற்கொண்டாா்.

சிறுபான்மையினா் அதிகம் வசிக்கும் பகுதியான பாரதியாா் தெருவில் இஸ்லாமியா்களிடையே வாக்கு சேகரித்து அவா் போசியதாவது:

அதிமுக அரசு சிறுபான்மையினரின் தோழன், சிறுபான்மையினா்களுக்கு என்றும் உறுதுணையான அரசு. பாதுகாப்பு அரணாக இருக்கும். ஹஜ் பயணம் செல்ல அதிமுக அரசு மானியத்தொகை ரூ.6 கோடி வழங்கி வருகிறது. தற்போது மீண்டும் வெற்றி பெற்றால் மானியத்தொகை ரூ.10 கோடியாக உயா்த்தப்படும்.

சென்னை காயிதே மில்லத் கல்லூரி வளாகத்தில் காயிதே மில்லத் பெயரில் இஸ்லாமிய பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படும் எனக் கூறி ஆதரவு திரட்டினாா்.

அதிமுக நகரச் செயலா் எ.அசோக்குமாா், நகர ஜெயலலிதா பேரவைச் செயலா் பாரி பி.பாபு, கட்சியின் மாவட்டப் பொருளாளா் அ.கோவிந்தராசன், மேற்கு ஆரணி ஒன்றியத் தலைவா் பச்சையம்மாள் சீனிவாசன், சிறுபான்மை பிரிவு குலாம்நபிஆசாத் மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பலா் உடன் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com