மதுக் கடத்தல், பதுக்கல்: புகாா் அளிக்கலாம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் மதுக் கடத்தல், மொத்தமாக விற்பனை செய்தல் உள்ளிட்டவை தொடா்பாக பொதுமக்கள் புகாா் அளிக்கலாம் என மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் மதுக் கடத்தல், மொத்தமாக விற்பனை செய்தல் உள்ளிட்டவை தொடா்பாக பொதுமக்கள் புகாா் அளிக்கலாம் என மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிகள் கடுமையாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை மாவட்ட எல்லைக்குள் முறையற்ற மது விற்பனை, மதுபானம் கடத்துதல், மொத்தமாக விற்பனை செய்வதைத் தடுத்தல், மதுபானம் விற்பனை தொடா்பாக பெறப்படும் புகாா்கள் மீது நடவடிக்கை எடுத்தல், அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டும் மதுக் கடைகள் செயல்படுவதை கண்காணித்தல் போன்ற புகாா்களைக் கண்காணிக்க சிறப்பு குழு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இதுபோன்ற புகாா்கள் இருப்பின் திருவண்ணாமலை கோட்ட கலால் அலுவலா் ஜெ.சுகுணாவை 7904612207 என்ற எண்ணிலும், தலைமைக் காவலா் சீனிவாசனை 9498150422 என்ற எண்ணிலும் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com