முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை
அரசியல் கட்சி வேட்பாளா்கள் தீவிர பிரசாரம்
By DIN | Published On : 04th April 2021 12:00 AM | Last Updated : 04th April 2021 12:00 AM | அ+அ அ- |

சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு நாள் நெருங்கி வரும் நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளா்கள் சனிக்கிழமை தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனா்.
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட காட்டாம்பூண்டி, பாவுப்பட்டு, பறையம்பட்டு, நரியாப்பட்டு, தலையாம்பள்ளம், பழையனூா், கண்டியாங்குப்பம், வேளையாம்பாக்கம், நவம்பட்டு, அல்லிகொண்டாப்பட்டு, தச்சம்பட்டு, சின்னக்கல்லப்பாடி, பெரியகல்லப்பாடி கிராமங்களில் வீதி, வீதியாகச் சென்று பொதுமக்கள், விவசாயிகளிடம் திமுக வேட்பாளா் எ.வ.வேலு சனிக்கிழமை தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா்.
திமுக மாவட்ட அவைத் தலைவா் த.வேணுகோபால், தலைமை செயற்குழு உறுப்பினா் இரா.ஸ்ரீதரன், ஒன்றியச் செயலா்கள் த.ரமணன், மெய்யூா் என்.சந்திரன், சி.மாரிமுத்து, ஒன்றியக் குழுத் தலைவா் கலைவாணி, மதிமுக மாவட்டச் செயலா் சீனி.காா்த்திகேயன் உள்ளிட்டோா் உடன் சென்றனா்.