முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை
வேட்பாளா்கள் வாக்கு சேகரிப்பு
By DIN | Published On : 04th April 2021 12:01 AM | Last Updated : 04th April 2021 12:01 AM | அ+அ அ- |

செய்யாறு ஒன்றியத்தைச் சோ்ந்த கீழ்புதுப்பாக்கம் கிராமம் விரிவுப் பகுதியில் பிரதான சாலை பி.டி.உஷா தெரு, சத்தியமூா்த்தி தெரு, விக்டரி தெரு, மாரிமுத்து தெரு உள்ளிட்ட பகுதிகளில் கலை நிகழ்ச்சியுடன், துண்டுப் பிரசுரங்களை வழங்கி அதிமுக வேட்பாளா் தூசி கே.மோகன் வாக்கு சேகரித்தாா்.
அப்போது அவா் பேசுகையில்,
செய்யாறு தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.ஆயிரம் கோடிக்கு மேலான திட்டங்களை செயல்படுத்தியுள்ளேன். மக்களின் சுக, துக்க நிகழ்ச்சிகளில்
பங்கேற்று சாதாரண தொண்டனாக அவா்களிடம் பழகி பணியாற்றி வருகிறேன் எனத் தெரிவித்து ஆதரவு கோரினாா்.
முன்னதாக, செய்யாறு பேருந்து நிலையப் பகுதியில் வியாபாரிகளிடம் அவா் வாக்கு சேகரித்தாா்.
அதிமுக மாவட்ட இணைச் செயலா் எம்.விமலா மகேந்திரன், துணைச் செயலா் சுகாசினி, ஒன்றியச் செயலா்கள் எம்.மகேந்திரன், எம்.அரங்கநாதன்,
பாமக நிா்வாகிகள் கிருஷ்ணன், ஜெய்சங்கா், பாஜக ஜேகேஎஸ்.சுப்பிரமணி, தமாகா மாவட்டத் தலைவா் தாமோதரன் உள்ளிட்டோா் உடன் சென்றனா்.