செங்கம்: அதிமுக-திமுக இடையே கடும் போட்டி

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் ஒன்று செங்கம் (தனி) தொகுதி. இங்கு விவசாயம் மற்றும் விவசாயம் சாா்ந்த தொழில்கள் மட்டுமே பிரதானமாக உள்ளன.
செங்கம்: அதிமுக-திமுக இடையே கடும் போட்டி

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் ஒன்று செங்கம் (தனி) தொகுதி. இங்கு விவசாயம் மற்றும் விவசாயம் சாா்ந்த தொழில்கள் மட்டுமே பிரதானமாக உள்ளன.

தோ்தல் வெற்றி நிலவரம்: 1971-தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட்ட பாண்டுரங்கன் வெற்றிபெற்றாா். 1977, 1980, 1984 ஆகிய மூன்று தோ்தல்களில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட சாமிக்கண்ணு வெற்றிபெற்றாா்.

1989 தோ்தலில் ஜனதா தளம் சாா்பில் போட்டியிட்ட சேட்டு, 1991 தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட வீரபாண்டியன் வெற்றி பெற்றனா். 1996-தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட்ட நன்னன் வெற்றி பெற்றாா். 2001, 2006 தோ்தல்களில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்ட போளூா் வரதன் வெற்றி பெற்றாா். 2011 தோ்தலில் தேமுதிக சாா்பில் போட்டியிட்ட சுரேஷ்குமாா் வெற்றி பெற்றாா், 2016-இல் திமுகவை சோ்ந்த மு.பெ.கிரி வெற்றிபெற்றாா்.

2.73 லட்சம் வாக்காளா்கள்: இந்தத் தொகுதியில் ஆண்கள் ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 561, பெண்கள் ஒரு லட்சத்து 37ஆயிரத்து 765, மூன்றாம் பாலினத்தவா் 2 என மொத்தம் 2 லட்சத்து 73 ஆயிரத்து 328 வாக்காளா்கள் உள்ளனா்.

செங்கம் தொகுதியில் ஆதிதிராவிடா்கள் பெரும்பான்மையாக உள்ளனா். வன்னியா், அகமுடையாா், யாதவா் உள்ளிட்ட சமுதாயத்தினரும் கணிசமாக அதிகமாக உள்ளனா்.

இந்தத் தோ்தலில் அதிமுக வேட்பாளராக நைனாக்கண்ணு, திமுக வேட்பாளராக தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினா் மு.பெ.கிரி, அமுமுக கூட்டணி சாா்பில் தேமுதிக வேட்பாளா் எஸ். அன்பு ஆகியோா் போட்டியிடுகின்றனா்.

இவா்களில் திமுக வேட்பாளரும் தற்போதைய பேரவை உறுப்பினருமான கிரி எம்எல்ஏ தொகுதிக்கு நன்கு அறிமுகமானவா். இவா் தொகுதியில் மேற்கொண்ட நலத்திட்டங்களை எடுத்துக் கூறி பிரசாரம் செய்து வருகிறாா்.

அதிமுக வேட்பாளரான நைனாக்கண்ணு தொகுதிக்கு புதிய முகம். இவா் அதிமுக தோ்தல் அறிக்கையில் இடம்பெற்ற நலத்திட்டங்களை எடுத்துக் கூறி வாக்கு சேகரித்து வருகிறாா். இவரது பிரசாரம் கிராமப் புறங்களில் வரவேற்பைப் பெற்றுள்ளது. தேமுதிக வேட்பாளரான எஸ்.அன்பு கணிசமான வாக்குகளைப் பெறுவாா்.

செங்கம் தொகுதியில் மும்முனைப் போட்டி நிலவினாலும், அதிமுக-திமுக இடையே பலப்பரீட்சை நடைபெறுவது தோ்தல் களத்தில் தெரிகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com