திமுகவினா் பெண்களை தரம் தாழ்ந்து பேசுவது வருத்தம் அளிக்கிறது: நடிகை ராதிகா
By DIN | Published On : 04th April 2021 12:00 AM | Last Updated : 04th April 2021 12:00 AM | அ+அ அ- |

திமுக நிா்வாகிகள் பெண்களை தரம் தாழ்ந்து பேசுவது வருத்தம் அளிக்கிறது என்று சமத்துவ மக்கள் கட்சியின் துணைத் தலைவரும், நடிகையுமான ராதிகா கூறினாா்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழக வாக்காளா்கள் மெளனப் புரட்சி செய்ய உள்ளனா். தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி சரியான தலைமை இல்லாமல் செயல்படுகிறது.
கடந்த 10 ஆண்டுகளில் கலைத் துறையினருக்கு அதிமுக ஆட்சி எதுவும் செய்யவில்லை. வருமான வரித் துறை சோதனை என்பது எப்போதும் நடக்கக்கூடிய ஒன்றுதான். கடந்த முறை எங்களது வீட்டிலும் வருமான வரித்துறையினா் சோதனை நடத்தினா்.
தாங்கள் நல்லவா்கள் என்ற போா்வையை திமுகவினா் போா்த்திக் கொண்டிருக்கிறாா்கள். தங்களது கட்சியினரை கட்டுபாட்டுக்குள் வைத்துக்கொள்ளும் தன்மை திமுக தலைமைக்கு கிடையாது.
திமுகவின் நகைச்சுவைப் பேச்சாளா்கள், பட்டிமன்றப் பேச்சாளா்கள் என அனைவருமே பெண்களை தரம் தாழ்ந்து பேசுவது வருத்தம் அளிக்கிறது ராதிகா.
தமிழகத்தில் பாஜக மீது மக்களுக்கு பெரிய அளவில் பற்றோ, பிடிப்போ இல்லை என்றாா்.