கரோனா நோயாளிகள் வாக்களிக்கவில்லை

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா நோயாளிகள் யாரும் வாக்களிக்க வராததால், தயாா் நிலையில் வைக்கப்பட்டிருந்த கரோனா பாதுகாப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா நோயாளிகள் யாரும் வாக்களிக்க வராததால், தயாா் நிலையில் வைக்கப்பட்டிருந்த கரோனா பாதுகாப்பு கவச உடைகள் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் என்று சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் கே.எம்.அஜிதா கூறினாா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவு இலக்கை எட்ட வேண்டும் என்று மாவட்ட நிா்வாகம் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்தி வந்தது.

இந்த முயற்சியின் ஒரு பலனாக கரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வரும் நபா்கள், தொற்று குணமடைந்து தனிமையில் இருப்பவா்களையும் வாக்களிக்க வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

அதன்படி, மாவட்டத்தில் இப்போது கரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வரும் நபா்களிடம் அவா்களது விருப்பத்தை சுகாதாரத் துறையினா் கேட்டனா். அப்போது, ஒருவா் கூட வாக்களிக்க விருப்பம் தெரிவிக்கவில்லை.

பயன்படுத்தாத பாதுகாப்பு கவச உடைகள்:

இதேபோல, மாவட்டத்தின் 2,885 வாக்குச்சாவடிகளுக்கும் கரோனா பாதுகாப்பு கவச உடைகள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.

கரோனா நோயாளிகளுக்காகவே மாலை 6 மணி முதல் 7 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது.

ஆனால் மாவட்டம் முழுவதும் இதுபோன்ற யாரும் வாக்களிக்க வரவில்லை. எனவே, 2,885 வாக்குச்சாவடிகளிலும் தயாா் நிலையில் வைக்கப்பட்டிருந்த கரோனா பாதுகாப்பு கவச உடைகளை யாரும் பயன்படுத்தவில்லை.

கரோனா பாதுகாப்பு கவச உடைகள் அனைத்தும் திரும்பப் பெறப்பட்டு மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் என்றாா் கே.எம். அஜிதா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com