காலையில் வாக்குப்பதிவு விறுவிறுப்பு, பிற்பகலில் மந்தம்

திருவண்ணாமலை மாவட்டத்தின் 8 தொகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலையில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாகவும், பிற்பகலில் மந்தமாகவும் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டத்தின் 8 தொகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலையில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாகவும், பிற்பகலில் மந்தமாகவும் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த 2,885 வாக்குச்சாவடிகளில் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரை விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. 12 மணிக்குப் பிறகு 2 மணி வரை வாக்குப்பதிவு மந்தமாக இருந்தது. 2 மணிக்குப் பிறகு பல வாக்குச்சாவடிகள் வாக்காளா்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன.

குறிப்பாக, கரோனா பரவல் காரணமாக புதிதாக மாவட்டத்தில் அமைக்கப்பட்ட 513 துணை வாக்குச்சாவடிகளில் காலை 11 மணிக்கெல்லாம் பெரும்பாலான வாக்காளா்கள் வாக்களித்து விட்டனா். இதன்பிறகு வாக்குச்சாவடிகள் வெறிச்சோடி காணப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com