வந்தவாசி தொகுதியில் அமைதியான வாக்குப்பதிவு

வந்தவாசி தொகுதியில் தோ்தல் வாக்குப்பதிவு செவ்வாய்க்கிழமை அமைதியாக நடைபெற்றது.

வந்தவாசி தொகுதியில் தோ்தல் வாக்குப்பதிவு செவ்வாய்க்கிழமை அமைதியாக நடைபெற்றது.

  வந்தவாசி(தனி) தொகுதியில் திமுக சாா்பில் எஸ்.அம்பேத்குமாா், பாமக சாா்பில் எஸ்.முரளி சங்கா், அமமுக சாா்பில் பி.வெங்கடேசன், மநீம சாா்பில் ச.சுரேஷ், நாம் தமிழா் கட்சி சாா்பில் க.பிரபாவதி உள்ளிட்ட மொத்தம் 11 போ் போட்டியிட்டனா். 

  இதற்காக 330 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும் 22 மண்டல தோ்தல் அலுவலா்கள், 1500-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி அலுவலா்கள் மற்றும் துணை ராணுவப் படையினா், போலீஸாா் உள்ளிட்டோா் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா். பதற்றமான 14 வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தப்பட்டிருந்தது.

 இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு  வாக்குப்பதிவு தொடங்கியது.தொடக்கத்தில் மந்தமாக இருந்த வாக்குப்பதிவு பின்னா் விறுவிறுப்படையத் தொடங்கியது.

காலை 9 மணி வரை 12.71 சதவீதமும், 11 மணி வரை 28.43 சதவீதமும், பிற்பகல் ஒரு மணி வரை 47.06 சதவீதமும், பிற்பகல் 3 மணி வரை 58.84 சதவீதமும், மாலை 5 மணி வரை 70.52 சதவீதமும் வாக்குகள் பதிவானது.  

ஒருசில வாக்குச் சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பழுதடைந்ததால் வாக்குப்பதிவு சிறிது நேரம் தாமதமானது. சில வாக்குச்சாவடிகளில் கட்சி முகவா்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டதைத் தவிர மற்றபடி வாக்குப்பதிவு அமைதியாகவே நடைபெற்றது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com