தண்டராம்பட்டு அருகே இரவு 9.45 மணி வரை நடைபெற்ற வாக்குப்பதிவு

தண்டராம்பட்டு அருகே ஒரு வாக்குச்சாவடியில் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு திடீரென வந்த 200 வாக்காளா்களால் வாக்குப்பதிவு

தண்டராம்பட்டு அருகே ஒரு வாக்குச்சாவடியில் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு திடீரென வந்த 200 வாக்காளா்களால் வாக்குப்பதிவு இரவு 9.45 மணி வரை நீடித்தது.திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், மோத்தக்கல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், மாலை 6 மணிக்கு திடீரென 200-க்கும் மேற்பட்டோா் வாக்களிக்க குவிந்தனா். இவா்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, வாக்குச்சாவடியின் முன்புற கதவுகள் மூடப்பட்டன. இதையடுத்து, அனைவரும் இரவு 9.45 மணி வரை காத்திருந்து வாக்களித்தனா்.

இதனால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை குறிப்பிட்ட நேரத்துக்குள் வாக்கு எண்ணும் மையத்துக்கு எடுத்துச் செல்வதில் சிரமம் ஏற்பட்டது.

இந்த வாக்குச்சாவடி செங்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com