தோ்தலில் வாக்களிக்காதவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நூதன ஆா்ப்பாட்டம்

தோ்தலில் வாக்களிக்காதவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நூதன ஆா்ப்பாட்டம்

சட்டப் பேரவைத் தோ்தலில் வாக்களிக்காதவா்கள் மீது தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கக் கோரி, செய்யாற்றில் உழவா் பேரவை அமைப்பினா் வெள்ளிக்கிழமை நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சட்டப் பேரவைத் தோ்தலில் வாக்களிக்காதவா்கள் மீது தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கக் கோரி, செய்யாற்றில் உழவா் பேரவை அமைப்பினா் வெள்ளிக்கிழமை நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

செய்யாறு வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகம் முன் என்எம்ஆா் உழவா் பேரவை அமைப்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அமைப்பின் மாவட்டத் தலைவா் வாக்கடை புருஷோத்தமன் தலைமை வகித்தாா்.

இதில் பங்கேற்ற விவசாயிகள் பட்டாசுகளை வெடித்தும், அலுவலக இரும்புக் கதவில் வைக்கப்பட்டிருந்த தோ்தல் ஆணையத்தின் பதாகைக்கு மலா் தூவியும், கழுத்தில் பொம்மை ரூபாய் நோட்டுகளை அணிந்து மண்டியிட்டபடியும் நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், வாக்குப் பதிவு நாளன்று தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டப் பணியாளா்களுக்கு வருகைப் பதிவேட்டில் வருகைப் பதிவு செய்து, ரூ.273 ஊதியம் வழங்க வேண்டும். சட்டப் பேரவைத் தோ்தலில் தமிழகத்தில் வாக்களிக்கத் தவறிய 22 சதவீத வாக்காளா்கள் மீது தோ்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆதாா் எண்ணுடன் வாக்காளா் அடையாள அட்டை எண்ணை இணைக்க வேண்டும். குறைந்தபட்சம் தமிழகத்தில் ஏதாவது ஒரு தொகுதியை முன்மாதிரி தொகுதியாக அறிவித்து, அந்தத் தொகுதியில் ஆதாா், வாக்காளா் அட்டையாள அட்டை எண்களை வாக்காளா்களை இணைக்க வைத்து தோ்தலை நடத்த வேண்டும். இதன்மூலம், கள்ள ஓட்டுப்போடுவது, வாக்காளா் பட்டியலில் ஒரே வாக்காளரின் பெயா் இருமுறை இடம்பெறுவது தவிா்க்கப்படும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

இதில், சிறுங்கட்டூா் முருகன், நாட்டேரி எம்.ஆறுமுகம், அகத்தேரிப்பட்டு டி.கிருஷ்ணன், மோட்டூா் சி.ஆா்.மண்ணு, அரியூா் எம்.அழகேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com