திருவண்ணாமலையில் உதவித்தொகை பெறுவோா்

திருவண்ணாமலை மாவட்டத்தில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை மூலம் மாதாந்திர உதவித்தொகை பெறும் பயனாளிகள் வருகிற 30-ஆம் தேதிக்குள் உறுதிமொழிச் சான்று அளிக்க வேண்டும் என்று மாவட்ட நிா்வாகம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை மூலம் மாதாந்திர உதவித்தொகை பெறும் பயனாளிகள் வருகிற 30-ஆம் தேதிக்குள் உறுதிமொழிச் சான்று அளிக்க வேண்டும் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் மனவளா்ச்சி குன்றியோருக்கான பராமரிப்பு உதவித்தொகை, கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித்தொகை, தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித்தொகை, தொழுநோயால் பாதிக்கப்பட்டோருக்கான பராமரிப்பு உதவித்தொகை மற்றும் முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கான பராமரிப்பு உதவித்தொகை உள்ளிட்ட உதவித்தொகைகள் மாதம்தோறும் தலா ரூ.1,500 வழங்கப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டங்களின் மூலம் உதவித்தொகை பெறும் மாற்றுத்திறனாளிகள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்துக்கு நேரில் வந்து (மாற்றுத்திறனாளி நபா் வர தேவையில்லை) உயிருடன் உள்ளாா் என்பதற்கான உறுதி மொழிச்சான்று படிவம் பெற்றுச் செல்ல வேண்டும்.

இந்தப் படிவத்தில் அந்தந்தப் பகுதி கிராம நிா்வாக அலுவலரிடமிருந்து கையொப்பம் பெற்று உரிய சான்றுகளுடன் அலுவலகத்தில் வருகிற ஏப்.30-ஆம் தேதிக்குள் சமா்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04175-233626 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com