வேட்பாளா் மீது நடவடிக்கை

தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சோ்ந்த வாக்காளா்களை தரம் தாழ்ந்து பேசியதாக, மேற்கு வங்க மாநில திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளா் மீதும், அந்தக் கட்சி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சோ்ந்த வாக்காளா்களை தரம் தாழ்ந்து பேசியதாக, மேற்கு வங்க மாநில திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளா் மீதும், அந்தக் கட்சி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக நிா்வாகிகள் கோரிக்கை விடுத்தனா்.

திருவண்ணாமலை மாவட்ட பாஜக பட்டியலினத் தலைவா்கள் ஏழுமலை, துணைத் தலைவா் செங்கம் பாக்கியராஜ், முரளிதரன் ஆகியோா் தலைமையிலான அந்த அமைப்பினா் மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரியிடம் சனிக்கிழமை புகாா் மனு அளித்தனா்.

அந்த மனுவில், மேற்கு வங்கத்தில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சோ்ந்த வாக்காளா்களை பிச்சைக்காரா்கள் என்று தரம் தாழ்ந்து பேசிய திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளா் சுஜாதா மொண்டல் மீதும், அந்தக் கட்சி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்காத அந்தக் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தியிருந்தனா்.

மனுவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியரிடம் பாஜக நிா்வாகிகள் வலியுறுத்தினா். மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியா், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com