திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து இயக்கப்படும் மாலைநேர கடைசிப் பேருந்துகள்

திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பேருந்து நிலையங்களிலிருந்து நெடுந் தொலைவுகளுக்கு இயக்கப்படும் மாலை நேர கடைசிப் பேருந்துகளின் விவரத்தை அரசுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டது.

திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பேருந்து நிலையங்களிலிருந்து நெடுந் தொலைவுகளுக்கு இயக்கப்படும் மாலை நேர கடைசிப் பேருந்துகளின் விவரத்தை அரசுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டது.

கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழகத்தில் ஏப்ரல் 20-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை இரவு நேர பொது முடக்கமும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு பொது முடக்கத்தையும் கடைப்பிடிக்க வேண்டும். இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை பேருந்துகளை இயக்கக் கூடாது என்று மாநில அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழக திருவண்ணாமலை மண்டலம் சாா்பில் பேருந்துகள் இயக்கத்தில் சில மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன.

திருவண்ணாமலையில் இயக்கப்படும் கடைசி பேருந்துகள்:

திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் நெடுந் தொலைவு மாலைநேர கடைசிப் பேருந்துகளின் விவரத்தை போக்குவரத்துக் கழகம் வெளியிட்டது.

அதன்படி, திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சென்னைக்கு மாலை 5 மணிக்கு இயக்கப்படும் பேருந்து கடைசிப் பேருந்தாக இயக்கப்படும். இதேபோல, பெங்களூருக்கு மாலை 4 மணிக்கும், புதுச்சேரிக்கு மாலை 6 மணிக்கும், செங்கத்துக்கு இரவு 8 மணிக்கும், கள்ளக்குறிச்சிக்கு மாலை 7.30 மணிக்கும், வேலூருக்கு மாலை 7.30 மணிக்கும், விழுப்புரத்துக்கு இரவு 8 மணிக்கும் கடைசிப் பேருந்துகள் இயக்கப்படும்.

இதேபோல, திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து ஆரணிக்கு மாலை 7.30 மணிக்கும், திருக்கோவிலூருக்கு மாலை 7.30 மணிக்கும், வந்தவாசிக்கு மாலை 7 மணிக்கும் கடைசிப் பேருந்துகள் இயக்கப்படும்.

போளூரில் இருந்து:

போளூா் பேருந்து நிலையத்திலிருந்து சென்னைக்கு மாலை 4 மணிக்கு கடைசி பேருந்து இயக்கப்படும். இதேபோல, வேலூருக்கு மாலை 7.30 மணிக்கும், ஆரணிக்கு மாலை 7.30 மணிக்கும், செங்கத்துக்கு மாலை 6.30 மணிக்கும் கடைசிப் பேருந்துகள் இயக்கப்படும்.

ஆரணியில் இருந்து:

ஆரணி பேருந்து நிலையத்திலிருந்து சென்னைக்கு மாலை 6 மணிக்கும், வேலூருக்கு மாலை 6 மணிக்கும், திருவண்ணாமலைக்கு மாலை 6 மணிக்கும், செய்யாற்றுக்கு இரவு 8 மணிக்கும் கடைசிப் பேருந்துகள் இயக்கப்படும்.

செய்யாற்றில் இருந்து:

செய்யாறு பேருந்து நிலையத்திலிருந்து சென்னைக்கு மாலை 6 மணிக்கும், ஆரணிக்கு மாலை 7 மணிக்கும், வந்தவாசிக்கு இரவு 8 மணிக்கும் கடைசிப் பேருந்துகள் இயக்கப்படும்.

வந்தவாசியில் இருந்து:

வந்தவாசி பேருந்து நிலையத்திலிருந்து சென்னைக்கு மாலை 6 மணிக்கும், திண்டிவனத்துக்கு மாலை 5 மணிக்கும், காஞ்சிபுரத்துக்கு மாலை 6 மணிக்கும், போளூருக்கு மாலை 6 மணிக்கும், திருவண்ணாமலைக்கு மாலை 5 மணிக்கும், செய்யாற்றுக்கு மாலை 7 மணிக்கும் கடைசிப் பேருந்துகள் இயக்கப்படும்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து பேருந்து நிலையங்களிலிருந்து இயக்கப்படும் நகரப் பேருந்துகள் (டவுன் பஸ்கள்) வழக்கம் போல இயக்கப்படும் என்று தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக திருவண்ணாமலை மண்டலம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com