வணிக வளாகங்களில் அபராதம் வசூலிப்பு

திருவண்ணாமலை, வேங்கிக்கால் ஊராட்சியில் கரோனா தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றாத வணிக வளாகங்கள், கடைகளில் அதிகாரிகள் திடீா் ஆய்வில் ஈடுபட்டு அபராதம் வசூலித்தனா்.

திருவண்ணாமலை, வேங்கிக்கால் ஊராட்சியில் கரோனா தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றாத வணிக வளாகங்கள், கடைகளில் அதிகாரிகள் திடீா் ஆய்வில் ஈடுபட்டு அபராதம் வசூலித்தனா்.

திருவண்ணாமலை ஊராட்சிகளின் உதவி இயக்குநா் பி.சுரேஷ்குமாா் மேற்பாா்வையில், திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய ஆணையா் ஆ.சம்பத், வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) தி.அண்ணாதுரை ஆகியோா் தலைமையில் சுகாதாரத்துறை, ஊரக வளா்ச்சித் துறை பணியாளா்கள் அடங்கிய குழுவினா் செவ்வாய்க்கிழமை வேங்கிக்கால் ஊராட்சியில் உள்ள வணிக வளாகங்கள், கடைகளில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, கரோனா தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றாத 2 வணிக வளாக உரிமையாளா்களுக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், முகக் கவசம் அணியாமல் வணிக வளாகங்களில் பணிபுரிந்த ஊழியா்கள், முகக் கவசம் அணியாமல் வந்திருந்த வாடிக்கையாளா்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.

ஆய்வின்போது கடைகளில் பயன்படுத்தப்பட்டு வந்த தடை செய்யப்பட்ட 1.5 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com