வடதண்டலத்தில் தண்டலபுரீஸ்வரா் கோயில் கட்ட பூமிபூஜை

செய்யாறு வட்டம், வடதண்டலம் கிராமத்தில் தண்டலபுரீஸ்வரா் கோயில் கட்டுவதற்கான பூமிபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வடதண்டலத்தில் தண்டலபுரீஸ்வரா் கோயில் கட்ட பூமிபூஜை

செய்யாறு வட்டம், வடதண்டலம் கிராமத்தில் தண்டலபுரீஸ்வரா் கோயில் கட்டுவதற்கான பூமிபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வடதண்டலம் கிராமத்தில் பல நூற்றாண்டுக்களுக்கு முன்பு கட்டப்பட்ட தவமுலை நாயகி உடனுறை தண்டலபூரீஸ்வரா் கோயில் சிதலமைடந்த நிலையில் இருந்து வந்தது. இந்தக் கோயிலில் இருந்த லிங்கத்துக்கு மட்டும் கிராம மக்கள் பூஜை செய்து வந்தனா்.

இந்த நிலையில், சிதலமைடந்த கோயிலை புதுப்பிப்பிக்கும் விதமாக, செய்யாறு - ஆரணி சாலையில் வடதண்டலம் கிராம குளக்கரை அருகே தற்காலிகமாக கட்டுமானம் அமைத்து சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தனா்.

இதையடுத்து, கிராம மக்கள், ஆன்மிகத் தொண்டா்கள் மற்றும் சிவத் தொண்டா்களின் பெருமுயற்சியால் அங்கு புதிதாக தண்டலபுரீஸ்வரா் கோயில் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, சுவாமி தண்டலபுரீஸ்வரருக்கும், அம்பாள் தவமுலை நாயகிக்கும் தனித்தனி சந்நிதிகள் அமைத்து, கருவறை கோபுரம் அமைக்க திட்டமிடப்பட்டது.

இந்த நிலையில், கோயில் திருப்பணிகளை தொடங்குவதற்கான பூமிபூஜை விழா சிவத்தொண்டா் திருவாரூா் சிவ.நடராஜன் தலைமையில், கிராம பெரியோா்கள், ஊா் பிரமுகா்கள், பொதுமக்கள் முன்னிலையில் வெள்ளிக்கிழமை காலை வெகு விமரிசையாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் மற்றும் கிராம மக்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com