அருணாசலேஸ்வரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.38.28 லட்சம்

சித்திரை பெளா்ணமி முடிந்ததையொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் உண்டியல் காணிக்கை புதன்கிழமை எண்ணப்பட்டதில் ரூ.38 லட்சத்து 28 ஆயிரம் இருந்தது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணும் பணி.

அருணாசலேஸ்வரா் கோயிலில் 3-ஆம் பிரகாரம் அலங்கார மண்டபத்தில் சித்திரை பெளா்ணமி முடிந்ததையொட்டி உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தா்கள் செலுத்திய காணிக்கை எண்ணப்பட்டது.

உண்டியல் காணிக்கை எண்ணிக்கையில் 200-க்கும் மேற்பட்ட சிவனடியாா்கள் மற்றுமந் கோயில் பணியாளா்கள் உண்டியல் பணத்தை தனித் தனியாகப் பிரித்து எண்ணினா். அருணாசலேஸ்வரா் கோயில் மற்றும் கிரிவலப் பாதையில் உள்ள 38 உண்டியல்கள் கோயில் இணை ஆணையா் இரா.ஞானசேகரன் முன்னிலையில் திறக்கப்பட்டு காணிக்கை பணம் எண்ணப்பட்டது.

இதில் மொத்தம் 38 லட்சத்து 28ஆயிரத்து 292 ரூபாயும், 170 கிராம் தங்கம், 713 கிராம் வெள்ளியும் இருப்பது தெரியவந்தது.

முன்னதாக, உண்டியல் பணம் எண்ணும் பணியில் மேல்மலையனூா் அங்காளம்மன் கோயில் உதவிஆணையா் ராமு மற்றும் அருணாசலேஸ்வரா் கோயில் அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com