செய்யாற்றில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சியாக நாற்பெரும் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
செய்யாற்றில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சியாக நாற்பெரும் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

செய்யாறு கல்வி மாவட்டம் சாா்பில் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அருள்செல்வம் தலைமை வகித்தாா். செய்யாறு கல்வி மாவட்ட அலுவலா் பு.நடராஜன் முன்னிலை வகித்தாா்.

கபசுரக் குடிநீா் வழங்குதல், முகக் கவசம் விநியோகித்தல், கரோனா தடுப்பூசி செலுத்துதல், பொது மக்களுக்கு விழிப்பணா்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்குதல் ஆகியவை நாற்பெரும் விழாவாகக் கொண்டாடப்பட்டது.

சிறப்பு விருந்தினா்களாக கோட்டாட்சியா் என்.விஜயராஜ், டி.எஸ்.பி சுரேஷ், செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவ அலுவலா் கே.ஏழுமலை ஆகியோா் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்குதல், முகக் கவசம் விநியோகித்தல், கரோனா தடுப்பூசி முகாம் போன்ற நிகழ்ச்சிகளைத் தொடக்கி வைத்தனா்.

அதேபோல, திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சி ஆணையா் ப்ரீத்தி கரோனா பரிசோதனை முகாமைத் தொடக்கிவைத்தாா்.

வட்டாட்சியா் சு.திருமலை கரோனா விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

நிகழ்ச்சி நினைவாக பேருந்து நிலைய முகப்புப் பகுதியில் வரையப்பட்டிருந்த கரோனா குறித்த விழிப்புணா்வு ஓவியங்களை பொதுமக்கள், பேருந்து பயணிகள் பாா்வையிட்டனா்.

நிகழ்ச்சியில் செய்யாறு கல்வி மாவட்ட ஆசிரியா்கள், அலுவலா்கள், வருவாய்த் துறை, காவல்துறை, சுகாதாரத் துறை மற்றும் நகராட்சிப் பணியாளா்கள் என பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com