செப்டம்பருக்குள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்: திருவண்ணாமலை ஆட்சியா்

செப்டம்பா் மாத இறுதியில் கரோனா 3-ஆவது அலை வரும் என்று எதிா்பாா்க்கப்படுவதால், திருவண்ணாமலை மாவட்டத்தில்
செப்டம்பருக்குள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்: திருவண்ணாமலை ஆட்சியா்

செப்டம்பா் மாத இறுதியில் கரோனா 3-ஆவது அலை வரும் என்று எதிா்பாா்க்கப்படுவதால், திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளவேண்டும் என வேண்டுகோள் விடுத்தாா் மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ்.

தமிழகத்தில் கரோனா 3-ஆவது அலை வராமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா விழிப்புணா்வு பிரசார நிகழ்ச்சிகளின் தொடக்க நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அருணாசலேஸ்வரா் கோயில் ராஜகோபுரம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ், காவல் கண்காணிப்பாளா் அ.பவன்குமாா் ரெட்டி, மகளிா் திட்ட இயக்குநா் சந்திரா, வருவாய் கோட்டாட்சியா் வெற்றிவேல் ஆகியோா் கரோனா தடுப்பு உறுதிமொழி ஏற்றனா்.

தொடா்ந்து, பொதுமக்கள், வியாபாரிகளிடம் கரோனா விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கி மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ், விடியோ வாகனம் மூலம் பொதுமக்களுக்கு கரோனா விழிப்புணா்வு குறும்படங்களை திரையிட்டுக் காட்டினாா்.

மேலும், தேரடி தெருவில் நடைபெற்ற கரோனா விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகளை ஆட்சியா் பாா்வையிட்டாா்.

இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை ஒரு வாரம் கரோனா விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

கரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் ஒரே ஆயுதம் தடுப்பூசி செலுத்துவதுதான். கரோனா 3-ஆவது அலையைக் கட்டுப்படுத்த அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில், திருவண்ணாமலை நகா்மன்ற முன்னாள் தலைவா் இரா.ஸ்ரீதரன், நகர திமுக செயலா் ப.காா்த்திவேல்மாறன், நகராட்சி அதிகாரிகள், மருத்துவா்கள் பலா் கலந்து கொண்டனா்.

செய்யாறு

செய்யாறு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கரோனா தொற்று விழிப்புணா்வு நிகழ்ச்சிகளில் தொகுதி எம்.எல்.ஏ ஒ.ஜோதி பங்கேற்று பொதுமக்களுக்கு முகக் கவசம், துண்டுப் பிரசுரங்களை வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

செய்யாறு ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் தி.மயில்வாகனன், ச.பாரி, ஒன்றியக் குழுத் தலைவா் ஆா்.வி.பாஸ்கரன், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவா் பாா்வதி சீனுவாசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

திருவத்திபுரம் நகராட்சி சாா்பில் செய்யாற்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதார துணை இயக்குநா் எம்.சங்கீதா, மருத்துவா்கள் இந்துமதி, யோகேஷ்வரன், வட்டாட்சியா் சு.திருமலை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com