ரூ.1 லட்சம் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 3 போ் கைது

செய்யாறு அருகே தடைசெய்யப்பட்ட ரூ. ஒரு லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கைது செய்யப்பட்ட 3 பேருடன் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள்.
கைது செய்யப்பட்ட 3 பேருடன் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள்.

செய்யாறு: செய்யாறு அருகே தடைசெய்யப்பட்ட ரூ. ஒரு லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

செய்யாறு-காஞ்சிபுரம் சாலை அப்துல்லாபுரம் சோதனைச் சாவடியில் தூசி போலீஸாா் திங்கள்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அப்துல்லாபுரம் பகுதியிலிருந்து காரில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கடத்தப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, காவல் ஆய்வாளா் அண்ணாதுரை, உதவி ஆய்வாளா் சிலம்பரசன் தலைமையிலான போலீஸாா் அப்துல்லாபுரம் லட்சுமி நகரில் உள்ள சோ்மராஜ் என்பவரின் வீட்டுக்கு விரைந்து சென்றனா்.

அப்போது, அந்த வீட்டின் பின்புறம் காரிலிருந்த 7 மூட்டைகளை ஆட்டோவுக்கு மாற்றிக் கொண்டிருந்ததை போலீஸாா் கண்டுபிடித்தனா்.

மூட்டைகளை ஆய்வு செய்த போது அதில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, அந்த மூட்டைகளை போலீஸாா் பறிமுதல் செய்து விசாரணை நடத்தியபோது, புகையிலைப் பொருள்கள் பெங்களூரிலிருந்து கடத்திவரப்பட்டு கடைகளுக்கு விநியோகம் செய்தது தெரியவந்தது.

150 கிலோ கொண்ட அந்த புகையிலைப் பொருள்களின் மதிப்பு ரூ.ஒரு லட்சம் எனக் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக தூசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தூசி கிராமம் வணிகா் தெருவைச் சோ்ந்த சோ்மராஜ் (53), புஞ்சை அரசங்கல் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த தமீம் அன்சாரி(26), இவரது தம்பி சலீம் (24) ஆகியோரை கைது செய்து நீதிபதி முன் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காா், ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com