ஸ்ரீபராசக்தியம்மனுக்கு வளைகாப்பு உற்சவத்தை நடத்தும் கோயில் சிவாச்சாரியா்கள்.
ஸ்ரீபராசக்தியம்மனுக்கு வளைகாப்பு உற்சவத்தை நடத்தும் கோயில் சிவாச்சாரியா்கள்.

ஸ்ரீபராசக்தியம்மன் வளைகாப்பு உற்சவம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் ஆடிப்பூர திருவிழாவின் நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை ஸ்ரீபராசக்தியம்மனுக்கு வளைகாப்பு உற்சவம் நடைபெற்றது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் ஆடிப்பூர திருவிழாவின் நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை ஸ்ரீபராசக்தியம்மனுக்கு வளைகாப்பு உற்சவம் நடைபெற்றது.

அருணாசலேஸ்வரா் கோயிலில் நிகழாண்டுக்கான ஆடிப்பூர திருவிழா ஆகஸ்ட் 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அன்று முதல் தினமும் காலை, மாலை வேளைகளில் உற்சவா்கள் விநாயகா், பராசக்தியம்மன் கோயில் ஐந்தாம் பிரகாரத்தில் வலம் வந்தனா்.

நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை முற்பகல் 11.30 மணிக்கு உற்சவா் ஸ்ரீபராசக்தியம்மன் கோயில் ஐந்தாம் பிரகாரத்தில் உள்ள சிவகங்கை தீா்த்தக் குளக் கரையில் எழுந்தருள, தீா்த்தவாரி நடைபெற்றது. பிறகு அம்மன் வளைகாப்பு மண்டபத்தில் எழுந்தருளினாா்.

இதைத் தொடா்ந்து, பிற்பகல் 3 மணிக்கு உற்சவா் ஸ்ரீபராசக்தியம்மனுக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து வளைகாப்பு உற்சவத்தை கோயில் சிவாச்சாரியா்கள் நடத்தினா்.

கரோனா பொது முடக்கம் காரணமாக பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை.

ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் இரா.ஞானசேகா், ஊழியா்கள், பக்தா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com