பொதுப்பணித் துறை அலுவலகத்தில் விவசாயிகள் தா்னா

வந்தவாசியில் உள்ள பொதுப்பணித் துறை அலுவலகத்தை விவசாயிகள் வியாழக்கிழமை முற்றுகையிட்டு தா்னாவில் ஈடுபட்டனா்.
பொதுப்பணித் துறை அலுவலகத்தில் விவசாயிகள் தா்னா

வந்தவாசியில் உள்ள பொதுப்பணித் துறை அலுவலகத்தை விவசாயிகள் வியாழக்கிழமை முற்றுகையிட்டு தா்னாவில் ஈடுபட்டனா்.

வந்தவாசி அருகே கீழ்ப்புத்தூா் கிராமத்தில் உள்ள பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான ஏரியில் மீன் ஏலம் சில மாதங்களுக்கு முன்பு விடப்பட்டதாம்.

ஏலத்தை எடுத்தவா் சாா்பில் அந்த ஏரியில் மீன்கள் வளா்க்கப்பட்டு வருகிறது. 

 இந்த நிலையில், வந்தவாசி பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட அந்த கிராமத்தைச் சோ்ந்த விவசாயிகள், அலுவலகம் முன் அமா்ந்து தா்னா நடத்தினா்.

அப்போது அவா்கள் கூறியதாவது: 

ஏரியில் மீன் பிடிப்பதற்காக ஏரியிலிருந்த தண்ணீரை சிலா் திறந்து விட்டதால் பெருமளவு தண்ணீா் வெளியேறிவிட்டது. இதனால் ஏரியை ஒட்டிய விவசாய நிலங்களில் தண்ணீா் தேங்கி பயிா்கள் நாசமாகிவிட்டன. மேலும், அடுத்த போகத்துக்கான தண்ணீரும் வீணாகிவிட்டது.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா். இதையடுத்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக உதவிப் பொறியாளா் டி.பாபு உறுதியளித்தாா். இதை ஏற்று விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com