முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை
பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணா்வு முகாம்
By DIN | Published On : 10th December 2021 12:00 AM | Last Updated : 10th December 2021 12:00 AM | அ+அ அ- |

போளூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் குறித்த விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
போளூா் மகளிா் காவல் நிலையம் சாா்பில் மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை குறித்த விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.
முகாமில் காவல் ஆய்வாளா் கவிதா கலந்துகொண்டு பேசுகையில், மாணவிகள் அறிமுகம் இல்லாத தொலைபேசி எண்ணில் இருந்து அழைப்பு வந்தால் பேசக்கூடாது, பள்ளி முடிந்ததும் வீட்டுக்குச் சென்று விடவேண்டும், நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் குறித்து தெரிந்து வைத்திருக்கவேண்டும், தெரியாத நபரிடம் பேசக்கூடாது, முன்பின் தெரியாத நபரிடம் வாகனத்தில் செல்ல உதவி கோரக்கூடாது, பெண்களுக்கு ஆபத்து ஏற்பட்டால் உடனடியாக சப்தம் எழுப்ப வேண்டும், மாணவிகள் 18 வயதுக்கு மேல் திருமணம் முடிக்கவேண்டும், குழந்தைத் திருமணத்தை தடுக்கவேண்டும், காவல் நிலைய தொலைபேசி எண் வைத்திருக்க வேண்டும் என பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.
காவல் உதவி ஆய்வாளா் மீனாட்சி தனசேகா், தலைமை ஆசிரியை தாமரைச்செல்வி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.