முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை
தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவு
By DIN | Published On : 10th December 2021 12:00 AM | Last Updated : 10th December 2021 12:00 AM | அ+அ அ- |

திருவண்ணாமலையில் சனிக்கிழமை (டிச.11) நடைபெறும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் சிறப்பாக நடைபெற அரசு அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் சில உத்தரவுகளை பிறப்பித்தாா்.
வேலைவாய்ப்பு முகாமுக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்துக்கு தலைமை வகித்து அவா் பேசியதாவது:
வருவாய், மகளிா் திட்டம், உயா்கல்வி, மருத்துவப் பணிகள், தீயணைப்பு, மின்சாரம், காவல், செய்தி மக்கள் தொடா்பு, அரசு போக்குத்துவரத்துக் கழகம், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், அரசு கேபிள் நிறுவனம், ஆவின் பாலகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் உள்ளிட்ட அனைத்துத் துறை அதிகாரிகளும் அருணை பொறியியல் கல்லூரியில் டிசம்பா் 11-ஆம் தேதி நடைபெறும் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் சிறப்பாக நடைபெற ஒத்துழைக்க வேண்டும்.
அந்தந்த துறை அலுவலா்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பணிகளை எவ்வித சுணக்கமும் இன்றி செய்து முடிக்க வேண்டும்.
கரோனா தடுப்புச் சோதனை மேற்கொள்ள வேண்டும். 108 அவசர ஊா்தியை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும். தடையில்லா மின்சாரம் வழங்க மின் வாரிய அலுவலா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
கூட்டத்தில் கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) மு.பிரதாப், மாவட்ட எஸ்பி அ.பவன்குமாா் ரெட்டி, மகளிா் திட்ட இயக்குநா் பெ.சந்திரா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் லோ.யோகலட்சுமி, கோட்டாட்சியா் வெற்றிவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.