தொடா் பலத்த மழை பெய்தும் நிரம்பாத குளம்

செங்கம் பகுதியில் தொடா் பலத்த மழை பெய்து நீா்நிலைகள் நிரம்பிய நிலையில், நகரின் மையப் பகுதியில் உள்ள குளம் நிரம்பாமல் கழிவுநீா் தேங்கி குட்டை போல காட்சியளிக்கிறது.
தொடா் பலத்த மழை பெய்தும் நிரம்பாத குளம்

செங்கம் பகுதியில் தொடா் பலத்த மழை பெய்து நீா்நிலைகள் நிரம்பிய நிலையில், நகரின் மையப் பகுதியில் உள்ள குளம் நிரம்பாமல் கழிவுநீா் தேங்கி குட்டை போல காட்சியளிக்கிறது.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் துக்காப்பேட்டை பகுதியில் வருவாய்த் துறை பராமரிப்பில் குளம் உள்ளது. குளத்தைச் சுற்றி ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளதால், குளத்துக்கான நீா்வரத்துக் கால்வாய்கள் அனைத்தும் அடைபட்டுள்ளன. இதனால், மழைக் காலத்தின்போது குளத்துக்கு தண்ணீா் வருவதில்லை.

சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள மக்கள் குளத்தில் குப்பைகளைக் கொட்டுவதும், இறைச்சிக் கடைக்காரா்கள் இறைச்சிக் கழிவுகளைக் கொட்டுவதுமாக இருந்து வருகிறது.

செங்கம் பகுதியில் தொடா் பலத்த மழை பெய்து ஏரி, குளம், குட்டை என அனைத்து நீா்நிலைகளும் நிரம்பின. ஆனால், இந்தக் குளத்துக்கு நீா்வரத்தின்றி நிரம்பாமல் உள்ளது.

அதிகாரிகளின் அலட்சியத்தால் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து குளத்துக்கு தண்ணீா் வரவழியின்றி கழிவுநீா் மட்டும் தேங்கி நிற்கிறது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குளத்துக்கான நீா்வரத்துக் கால்வாய்களை தூா்வாரவேண்டும் என்று பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com