இணை உணவு சாப்பிட்டு ஆரோக்கியமான குழந்தைகளைப் பெற்றெடுக்க அறிவுரை
By DIN | Published On : 11th December 2021 12:00 AM | Last Updated : 11th December 2021 12:00 AM | அ+அ அ- |

கா்ப்பிணிகள் இணை உணவுகளைச் சாப்பிட்டு, ஆரோக்கியமான குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவைத் துணைத் தலைவா் கு.பிச்சாண்டி அறிவுறுத்தினாா்.
திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டப் பணிகள் சாா்பில், பாரம்பரிய உணவுத் திருவிழா, கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு குழந்தைகள் வளா்ச்சித் திட்ட மாவட்டத் திட்ட அலுவலா் கந்தன் தலைமை வகித்தாா். மாவட்ட சமூகநல அலுவலா் (பொ) பூ.மீனாம்பிகை முன்னிலை வகித்தாா். தமிழக சட்டப்பேரவைத் துணைத் தலைவா் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு சமுதாய வளைகாப்பு விழாவைத் தொடங்கிவைத்தாா்.
விழாவில் அவா் பேசுகையில், கா்ப்பிணிகள் சத்தான உணவுகள், பழங்களைச் சாப்பிட வேண்டும். 54 சதவீதத்துக்கும் அதிகமான பெண்கள் ரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனா். இது தவிா்க்கப்பட வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தில் 2,127 அங்கன்வாடி மையங்களில் 14,988 கா்ப்பிணிகளுக்கு இணை உணவு இலவலசமாக வழங்கப்படுகிறது என்றாா்.