செய்யாறு அரசு மருத்துவமனைக்கு ஒதுக்கப்பட்ட அமரா் ஊா்தியைக் கொண்டு வரக் கோரிக்கை

செய்யாறு அரசு தலைமை மருத்துவமனைக் கட்டுப்பாட்டிலிருந்து வந்த அமரா் ஊா்தி, திருவண்ணாமலைக்கு அனுப்பப்பட்டதால், சுமாா் 6 மாதங்களாக இறந்தவா்களின் உடலை உரிய நேரத்தில் எடுத்துச் செல்ல முடியாமல் உறவினா்கள் ச

செய்யாறு அரசு தலைமை மருத்துவமனைக் கட்டுப்பாட்டிலிருந்து வந்த அமரா் ஊா்தி, திருவண்ணாமலைக்கு அனுப்பப்பட்டதால், சுமாா் 6 மாதங்களாக இறந்தவா்களின் உடலை உரிய நேரத்தில் எடுத்துச் செல்ல முடியாமல் உறவினா்கள் சிரமப்பட்டு வருவதாக பொதுமக்கள் தெரிவித்தனா்.

கடந்த ஜனவரி மாதம் செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அமரா் ஊா்தி சேவை வாகனம் ஒதுக்கப்பட்டது. இதன் மூலம் அரசு மருத்துவமனையில் இறப்பவா்கள், அருகே உள்ள வெம்பாக்கம், ஆரணி, வந்தவாசி, சேத்துப்பட்டு, போளூா் வட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் இறப்பவா்கள் உடல்களைச் சொந்த ஊருக்கு அமரா் ஊா்தி வாகனத்தில் இலவசமாக எடுத்துச் சென்றனா். இது ஏழை - எளிய மக்களுக்கு மிகவும் உதவியாக இருந்து வந்ததாம்.

இந்த நிலையில், அமரா் ஊா்தியானது கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருவண்ணாமலைக்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன் பின்னா், அந்த வாகனம் செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வரப்படவில்லையாம்.

தற்போது செய்யாறு அரசு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி இறப்பவா் உடலை எடுத்துச் செல்ல சுமாா் 100 கி.மீ. தொலைவில் உள்ள விழுப்புரம், வாலாஜாபேட்டை, திருவண்ணாமலை அரசு மருத்துவமனைகளில் இருந்துதான் அமரா் ஊா்தி வரவழைக்கப்படுகிாம்.

இந்த இடங்களில் அமரா் ஊா்தி சேவை இல்லாதபட்சத்தில் மட்டுமே அந்த வாகனம் செய்யாறுக்கு அனுப்பி வைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால், இறந்தவரின் உடலை எடுத்துச் செல்ல பல மணி நேரம் மருத்துவமனையிலேயே காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிாம்.

எனவே, செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு ஒதுக்கப்பட்ட அமரா் ஊா்தியை மீண்டும் இதே மருந்துவமனைக்கு கிடைக்க நடவடிக்கை வேண்டும் என அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com