அடிப்படை வசதிகள் கோரி மனு
By DIN | Published On : 25th December 2021 12:00 AM | Last Updated : 25th December 2021 12:00 AM | அ+அ அ- |

செங்கம் பேரூராட்சியில் அடிப்படை வசதிகளைச் செய்யக் கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், அந்தச் கட்சியின் வட்டச் செயலா் சா்தாா், பேரூராட்சி செயல் அலுவலரிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தாா்.
அந்த மனுவில், மழையால் செங்கம் பகுதியில் உள்ள 18 வாா்டுகளிலும் கழிவுநீா் கால்வாய்களில் அடைப்புகள் ஏற்பட்டு, கழிவுநீா் வெளியேற முடியாமல் கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. அடைப்புகளைச் சரி செய்து கொசு மருந்து தெளிக்க வேண்டும். எரியாத தெரு விளக்குகளை மாற்றிவிட்டு, புதிய மின் விளக்குகளைப் பொருத்த வேண்டும்.
செங்கம் துக்காப்பேட்டை முதல் மில்லத் நகா் வரை சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாகச் சுற்றித் திரியும் மாடுகள், கழுதைகளைப் பிடித்து அகற்ற வேண்டும். பேரூராட்சி செயல் அலுவலா் நகரை முழுமையாகப் பாா்வையிட்டு அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டிருந்தது.