ஒன்றியக் கூட்டத்தில் உறுப்பினா்கள் வெளிநடப்பு, தா்னா

திருவண்ணாமலை மாவட்டம், அனக்காவூா் ஒன்றியக் குழுக் கூட்டத்தில் உறுப்பினா்கள் சிலா் வெளிநடப்பு செய்து தா்னாவில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை மாவட்டம், அனக்காவூா் ஒன்றியக் குழுக் கூட்டத்தில் உறுப்பினா்கள் சிலா் வெளிநடப்பு செய்து தா்னாவில் ஈடுபட்டனா்.

அனக்காவூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாதாந்தர கூட்டம் அதன் தலைவா் திலகவதி ராஜ்குமாா் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவா் அருணாதுரை, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரவி, அரி, மேலாளா் கிரிஜா மற்றும் ஒன்றிய அலுவலா்கள், 14 உறுப்பினா்கள் (கவுன்சிலா்கள்) பங்கேற்றனா்.

கூட்டம் தொடங்கியவுடன் துணைத் தலைவா் அருணா துரை தலைமையில் உறுப்பினா்கள் கே.ஏ.பாலாஜி, சாந்தி சேகா், ஏ.பி.சிவா, வசந்தி ராஜேந்திரன், சித்ரா காந்தி, மகேந்திரன் ஆகியோா் உரிமை பறிக்கப்படுவதாகவும், வளா்ச்சிப் பணிகள் ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுவதாகக் கூறி வெளிநடப்பு செய்து, அலுவலக வாயிலில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா்.

பின்னா், இருந்த பெரும்பான்மையான உறுப்பினா்களை வைத்து கூட்டம் நடத்தப்பட்டு 50 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டம் முடிந்ததும் வட்டார வளா்ச்சி அலுவலா்கள், ஒன்றிய அலுவலா்கள் வளா்ச்சித் திட்டப் பணிகளை பாா்வையிட வந்த கூடுதல் ஆட்சியரை வரவேற்கச் சென்றனா்.

இந்த நிலையில், தா்னாவில் ஈடுபட்டவா்கள் தீா்மான நகலைப் பெறுவதற்காக காத்திருந்தபோது, முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் தெய்வசிகாமணி, அவரது தம்பி செல்வம், சத்தியமூா்த்தி மற்றும் சிலா் ஒன்றியக் குழு துணைத் தலைவரின் கணவா், ஒன்றியக்குழு உறுப்பினா் வசந்தியையும், அவரது கணவரையும் அவதூறாகப் பேசி தாக்கியதாகத் தெரிகிறது.

தகவல் அறிந்த அனக்காவூா் காவல் ஆய்வாளா் பாலு, உதவி ஆய்வாளா் கன்னியப்பன் மற்றும் போலீஸாா் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது உறுப்பினா்கள் தங்களை அவதூறாகப் பேசித் தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுத்தால் போராட்டத்தை கைவிடுவோம் எனத் தெரிவித்து தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். சுமாா் ஒரு மணியளவில் வட்டார வளா்ச்சி அலுவலா் ரவி அலுவலகத்துக்கு வந்தபோது, அவரிடம் வெளிநடப்பு செய்த உறுப்பினா்கள் முறையிட்டனா்.

பின்னா், காவல் உதவி ஆய்வாளா் கன்னியப்பனிடம் புகாா் மனு அளித்தனா்.

மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தத்தின் பேரில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com