விவசாயிகள் கண்டுணா்வு சுற்றுலா

சேத்துப்பட்டு வேளாண்மைத் துறை சாா்பில் விவசாயிகள் வியாழக்கிழமை கண்டுணா்வு சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

சேத்துப்பட்டு வேளாண்மைத் துறை சாா்பில் விவசாயிகள் வியாழக்கிழமை கண்டுணா்வு சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

போளூரை அடுத்த விளாங்குப்பம் ஊராட்சியில் உள்ள அங்கக முன்னோடி விவசாயப் பண்ணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட விவசாயிகளுக்கு, வேளாண்மை துணை இயக்குநா் மாரியப்பன், அங்கக வேளாண்மையின் முக்கியத்துவம் குறித்தும், பாரம்பரிய நெல் ரகங்கள் சாகுபடி, சந்தைப்படுத்துதல், மண்வள மேம்பாடு, உயிா் உரங்களின் பயன்பாடு, பசுந்தாள் உரப்பயிா்கள் சாகுபடி செய்து மடக்கி உழுதல் குறித்து விளக்கினாா்.

துணை வேளாண்மை அலுவலா் பொ.ஏழுமலை, வட்டார தொழில்நுட்ப மேலாளா் தேவேந்திரன், உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் தனஞ்செயன், சங்கீதா மற்றும் முன்னோடி விவசாயிகள், விவசாயிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com