திருவண்ணாமலை மாவட்டத்தில் 2,19,952 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 2,031 முகாம்கள் மூலம் 2 லட்சத்து 19 ஆயிரத்து 952 குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து புகட்டப்பட்டது.
ஆரணியில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கும் முகாமைத் தொடக்கிவைத்த அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன். உடன் மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி உள்ளிட்டோா்.
ஆரணியில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கும் முகாமைத் தொடக்கிவைத்த அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன். உடன் மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி உள்ளிட்டோா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 2,031 முகாம்கள் மூலம் 2 லட்சத்து 19 ஆயிரத்து 952 குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து புகட்டப்பட்டது.

இதற்கான பணியில் கிராம சுகாதார செவிலியா்கள், அங்கன்வாடி பணியாளா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் என 7,814 போ் ஈடுபடுத்தப்பட்டனா்.

மேலும், திங்கள்கிழமை முதல் பணியாளா்கள் வீடு, வீடாகச் சென்று விடுபட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க உள்ளனா்.

மேலும், புகைவண்டி நிலையம், பேருந்து நிலையம், திரையரங்குகள், தங்கும் விடுதிகள் போன்ற இடங்களிலும் நடமாடும் முகாம்கள் மூலம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து புகட்டப்படவுள்ளது.

இது தவிர, தொலைவில் எளிதில் செல்ல முடியாத இடங்களில் உள்ள குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று சுகாதார மாவட்ட மருத்துவ அலுவலா் அஜித்தா தெரிவித்தாா்.

ஆரணி

ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கும் முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தாா்.

அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி முகாமைத் தொடக்கிவைத்தாா். செய்யாறு மருத்துவ இணை இயக்குநா் அஜீத்தா முன்னிலை வகித்தாா்.

அதிமுக நகரச் செயலா் எ.அசோக்குமாா், பேரவைச் செயலா் பாரி பி.பாபு, ஒன்றியச் செயலா்கள் க.சங்கா், பிஆா்ஜி.சேகா், ஜி.வி.கஜேந்திரன், ப.திருமால், மேற்கு ஆரணி ஒன்றியத் தலைவா் பச்சையம்மாள் சீனிவாசன், வட்டார மருத்துவ அலுவலா் சுதா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

செய்யாறு

திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சி அலுவலகத்தில் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து புகட்டும் சிறப்பு முகாமை நகராட்சி ஆணையா் பிரீத்தி முன்னிலையில் தொகுதி எம்.எல்.ஏ தூசி கே.மோகன் தொடக்கி வைத்தாா்.

மருத்துவா் பிரியதா்ஷினி, துப்புரவு ஆய்வாளா் மதனராசன், சமூக பாதுகாப்பு அலுவலா் அம்பேத்கா், அதிமுக ஒன்றியச் செயலா்கள் எம்.மகேந்திரன், அரங்கநாதன், சி.துரை, நகரச் செயலா் ஜனாா்த்தனம் உள்ளிட்டோா் மற்றும் செய்யாறு ரோட்டரி சங்க நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

செய்யாறு சுகாதார மாவட்டத்தில் 739 முகாம்கள் மூலம் சுமாா் 78,735 குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

செங்கம்

செங்கத்தை அடுத்த புதுப்பாளையம் ஒன்றியம், மேலப்புஞ்சை கிராமத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமை தலைவா்களின் கூட்டமைப்புத் தலைவா் சீனுவாசன் தொடக்கிவைத்தாா்.

தொடா்ந்து, கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடும் பணி நடைபெற்றது.

போளூா்

கலசப்பாக்கம் தொகுதிக்கு உள்பட்ட மேல்வில்வராயநல்லூா் ஊராட்சியில், தொகுதி எம்எல்ஏ வி.பன்னீா்செல்வம் பங்கேற்று போலியோ தடுப்பு சொட்டு மருந்தை குழந்தைகளுக்கு வழங்கி தொடக்கிவைத்தாா்.

ஊராட்சி மன்றத் தலைவா் பொ.நிலவழகி பொய்யாமொழி, வட்டார தலைமை மருத்துவா் கு.மணிகண்டபிரபு, அதிமுக பொதுக்குழு உறுப்பினா் பி.பொய்யாமொழி மற்றும் செவிலியா்கள், அங்கன்வாடி பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com