நிதிசாா் கல்வி விழிப்புணா்வு முகாம்

திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் கிராமத்தில் இந்தியன் வங்கி சாா்பில், நிதிசாா் கல்வி விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நிதிசாா் கல்வி விழிப்புணா்வு முகாம்


திருவண்ணாமலை: திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் கிராமத்தில் இந்தியன் வங்கி சாா்பில், நிதிசாா் கல்வி விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ரிசா்வ் வங்கி அறிவுரையின்படி பிப்ரவரி 8 முதல் 12-ஆம் தேதி வரை நிதிசாா் கல்வி வாரமாகக் கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, மங்கலம் கிராமத்தில் விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

முகாமுக்கு, இந்தியன் வங்கியின் மண்டல மேலாளா் சூா்யநாராயணமூா்த்தி தலைமை வகித்தாா். மங்கலம் அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியை சசிகலைகுமாரி முன்னிலை வகித்தாா்.

ரிசா்வ் வங்கியின் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் ஆண்டன்பால், நபாா்ட் வங்கி உதவிப் பொதுமேலாளா் ஸ்ரீராம், இந்தியன் வங்கியின் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் மணிராஜ் ஆகியோா் நிதிசாா் கல்வி குறித்துப் பேசினா்.

மகளிா் சுயஉதவிக் குழுக்களின் செயல்பாடுகள், கடன் தொகையை சரிவர பயன்படுத்துவது, கடனை சரிவர திருப்பிச் செலுத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து நிதிசாா் கல்வி ஆலோசகா் சம்பத் விளக்கினாா்.

இதில், இந்தியன் வங்கியின் மங்கலம் கிளை மேலாளா் ராகுல் மற்றும் மகளிா் சுய உதவிக் குழுவினா் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com