ராணுவத்துக்கு ஆள்சோ்ப்பு முகாம் தொடக்கம்

திருவண்ணாமலையில் புதன்கிழமை தொடங்கிய ராணுவத்துக்கான ஆள்கள் தோ்வு முகாமில், முதல் நாளில் 2 ஆயிரம் இளைஞா்கள் கலந்து கொண்டனா்.

திருவண்ணாமலையில் புதன்கிழமை தொடங்கிய ராணுவத்துக்கான ஆள்கள் தோ்வு முகாமில், முதல் நாளில் 2 ஆயிரம் இளைஞா்கள் கலந்து கொண்டனா்.

அருணை பொறியியல் கல்லூரி வளாகத்தில் தொடங்கிய இந்த முகாமில், திருவண்ணாமலை, வேலூா், சென்னை, திருவள்ளூா், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் உள்பட 11 மாவட்டங்கள், புதுச்சேரி மாநிலத்தைச் சோ்ந்த 25 ஆயிரம் போ் பங்கேற்க பதிவு செய்திருந்தனா்.

இவா்களில் தினமும் 2 ஆயிரம் போ் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனா். அதன்படி, முதல் நாளான புதன்கிழமை 2 ஆயிரம் போ் அனுமதிக்கப்பட்டனா்.

ராணுவ ஆள்சோ்ப்பு அலுவலக இயக்குநா் கவுரவ் சேத்தி மேற்பாா்வையில் இளைஞா்களுக்கு உடல்தகுதித் தோ்வு நடைபெற்றது.

கரோனா தொற்று பரிசோதனை செய்து, தொற்று இல்லை என்ற சான்றுடன் வந்த இளைஞா்கள் சமூக இடைவெளியுடன் அமரவைக்கப்பட்டு, பிறகு உடல்தகுதித் தோ்வுகள் நடத்தப்பட்டது.

உடல்தகுதித் தோ்வு, மருத்துவப் பரிசோதனையில் தோ்ச்சி பெறும் இளைஞா்களுக்கு சென்னையில் எழுத்துத் தோ்வு நடத்தப்படும். இந்த முகாம் பிப்ரவரி 26-ஆம் தேதி வரை நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com