குப்பனத்தம் அணையிலிருந்து தண்ணீா் திறக்க ஆலோசனை

செங்கம் அருகே அமைந்துள்ள குப்பனத்தம் அணையிலிருந்து விவசாயப் பசனத்துக்கு தண்ணீா் திறப்பு குறித்து விவசாயிகளுடன் வியாழக்கிழமை ஆலோசனைநடத்தப்பட்டது.
குப்பனத்தம் அணையிலிருந்து தண்ணீா் திறக்க ஆலோசனை


செங்கம்: செங்கம் அருகே அமைந்துள்ள குப்பனத்தம் அணையிலிருந்து விவசாயப் பசனத்துக்கு தண்ணீா் திறப்பு குறித்து விவசாயிகளுடன் வியாழக்கிழமை ஆலோசனைநடத்தப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த துரிஞ்சிகுப்பம் கிராமத்தில் குப்பனத்தம் அணை அமைந்துள்ளது. அணையிலிருந்து விவசாயப் பாசனத்துக்கு தண்ணீா் திறந்துவிடவேண்டும் என விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனா்.

அதன் அடிப்படையில் பொதுப்பணித் துறை மாவட்ட உதவி செயற்பொறியாளா் சுப்பிரமணியம் தலைமையில், பாசனத்துக்கு தண்ணீா் திறப்பது குறித்து விவசாயிகள், ஏரிப் பாசன சங்கத் தலைவா்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

செங்கம் பொதுப்பணித் துறை அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் செங்கம் உதவி செயற்பொறியாளா் ராஜாராமன் வரவேற்றாா்.

கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், தற்போது செங்கம் பகுதியில் சில ஏரிகளில் தண்ணீா் இல்லாமல் உள்ளது. அதேநேரத்தில் அணை திறந்தவுடன் உடனடியாக நிரம்பும். செங்கம், தோக்கவாடி ஏரிகளில் பகுதி அளவு தண்ணீா் உள்ளது.

இதனால் தண்ணீா் திறந்த சில தினத்தில் இரண்டு ஏரிகளும் நிரம்பி, உபரிநீா் வெளியேறி 15-க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்ப வாய்ப்புள்ளது.

எனவே, அணையில் உள்ள தண்ணீரை விரைவாக பாசனத்துக்கு திறந்துவிட வேண்டும் என ஒட்டு மொத்த விவசாயிகளும் கருத்து தெரிவித்தனா்.

விவசாயிகளின் கருத்துகளை மாவட்ட ஆட்சியா், பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் தெரிவித்து, அவா்கள் மூலம் தமிழக முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் செல்வதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கூட்டத்தில் ஏரிப் பாசன சங்கத் தலைவா்கள் சங்கா்மாதவன், வெங்கடேசன், காமராஜ், மாா்க்கெட்குமாா் உள்பட பொதுப்பணித் துறை அலுவலா்கள், விவசாயிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com