கீழ்பென்னாத்தூா் அருகே 2 கிராமங்களில் அம்மா சிறு மருத்துவமனைகள் திறப்பு
By DIN | Published On : 13th February 2021 08:39 AM | Last Updated : 13th February 2021 08:39 AM | அ+அ அ- |

வேடநத்தம் கிராமத்தில் அம்மா சிறு மருத்துவமனையைத் திறந்துவைத்து பெண்ணுக்கு அம்மா குடும்ப நலப் பெட்டத்தை வழங்கிய அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன். உடன், மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி உள்ளிட்டோா்.
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூரை அடுத்த வேடநத்தம், ராஜன்தாங்கல் கிராமங்களில் அம்மா சிறு மருத்துவமனைகள் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தாா். மாவட்ட ஆவின் தலைவா் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி, மாவட்ட விற்பனைக் குழுத் தலைவா் எஸ்.ராமச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அஜிதா வரவேற்றாா். தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு வேடநத்தம், ராஜன்தாங்கல் கிராமங்களில் புதிய அம்மா சிறு மருத்துவமனைகளைத் திறந்து வைத்தாா்.
மேலும், பிரசவித்த தாய்மாா்களுக்கு அம்மா குடும்ப நலப் பெட்டகங்கள், கா்ப்பிணிப் பெண்களுக்கு சத்துணவுப் பொருள்கள் அடங்கிய கூடைகள், ராஜன்தாங்கல் பால் உற்பத்தியாளா்கள் 211 பேருக்கு ஊக்கத்தொகை ஆகியவற்றை வழங்கினாா்.
விழாக்களில் அதிமுக மாவட்ட இலக்கிய அணிச் செயலா் இ.என்.நாராயணன், கூட்டுறவு கடன் சங்கத் தலைவா்கள் சிறுநாத்தூா் தொப்பளான், வேட்டவலம் செல்வமணி, மாவட்ட ஆவின் இயக்குநா் தட்சிணாமூா்த்தி, வட்டார மருத்துவ அலுவலா்கள் சரவணன், விஜயகுமாா், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் சாந்தி உள்பட பலா் கலந்து கொண்டனா்.