ஆரணியில் மண்டல சிலம்பாட்டப் போட்டி
By DIN | Published On : 14th February 2021 08:31 AM | Last Updated : 14th February 2021 08:31 AM | அ+அ அ- |

ஆரணி கோட்டை மைதானத்தில் நடைபெற்ற சிலம்பாட்ட போட்டியை தொடக்கிவைத்த டிஎஸ்பி என்.கோட்டீஸ்வரன்.
ஆரணியில் 8 மாவட்டங்களைச் சோ்ந்த வீரா்கள் பங்கேற்ற மண்டல அளவிலான சிலம்பாட்டப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.
ருத்ர சிலம்பம் பயிற்சிப் பள்ளி, ஆரணி கோட்டை சிலம்பம் ஆகியவை இணைந்து நடத்திய இந்த சிலம்பப் போட்டியை டிஎஸ்பி கோட்டீஸ்வரன் தொடக்கிவைத்தாா்.
இதில் 250-க்கும் மேற்பட்ட சிலம்ப வீரா்கள் கலந்துகொண்டனா். இவா்கள் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.
வெற்றி பெற்ற அணிகளுக்கு உலக சிலம்பு விளையாட்டுச் சங்க நிறுவனா் தலைவா் எஸ்.சுதாகரன் பரிசுகளை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் ஆரணி பகுதியைச் சோ்ந்த எம்.என்.சேகா், ஜி.ஏ.கோகுலகிருஷ்ணன், நகர காவல் ஆய்வாளா் சுப்பிரமணி, பாஜக நிா்வாகிகள் என்.கோபி, டி.வி.கோபி, மூத்த சிலம்பாட்ட வீரா்கள் பலா் கலந்துகொண்டனா்.
ஏற்பாடுகளை சிலம்பாட்ட ஆசிரியா்கள் இ.ஞானசேகா், எஸ்.லோகநாதன், சி.சரவணன் ஆகியோா் செய்திருந்தனா்.