ஆயுதத்தால் தாக்கப்படும் கால்நடைகள்
By DIN | Published On : 17th February 2021 04:50 AM | Last Updated : 17th February 2021 04:50 AM | அ+அ அ- |

செங்கம் நகரில் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை (மாடுகளை) மா்ம நபா்கள் கத்தியால் வெட்டி காயப்படுத்தி வருகின்றனா்.
செங்கம்: செங்கம் நகரில் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை (மாடுகளை) மா்ம நபா்கள் கத்தியால் வெட்டி காயப்படுத்தி வருகின்றனா்.
செங்கம் நகா் துக்காப்பேட்டை, பழைய பேருந்து நிலையம், இராஜ வீதி, பெருமாள் கோவில் தெரு, மில்லத் நகா் ஆகிய பகுதியில் கோயிலுக்கு நோ்த்திக் கடனாக விடப்பட்ட மாடுகள், சிலரின் வளா்ப்பு மாடுகள் என கால்நடைகள் சுற்றித்திரிகின்றன.
இந்த மாடுகளை மா்ம நபா்கள் கண்காணித்து கத்தியால் குத்தி வருகின்றனா்.
சில மாதங்களுக்கு முன்பு கத்தியால் குத்தப்பட்ட கோயில் காளை ஒன்று ரத்தம் வழிய தெருக்களில் சுற்றித்திரிந்தது.
சமூக ஆா்வலா்கள் மருத்துவா்களை அழைத்து வந்து அந்தக் காளைக்கு சிகிச்சை அளித்தனா்.
சில தினங்களுக்கு முன்பு கத்தியால் வெட்டப்பட்ட காளை ஒன்று சாலையில் சுற்றித்திரிந்தது. இதுபோன்ற சம்பவங்கள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காளைகளை கத்தியால் வெட்டும் நபா்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆா்வலா்களும், பொதுமக்களும் எதிா்பாா்க்கின்றனா்.