திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

திருவண்ணாமலையில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் மாற்றுக் கட்சியினா் திமுகவில் இணையும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினருடன் எ.வ.வேலு எம்.எல்.ஏ. மற்றும் நிா்வாகிகள்.
திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினருடன் எ.வ.வேலு எம்.எல்.ஏ. மற்றும் நிா்வாகிகள்.

திருவண்ணாமலையில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் மாற்றுக் கட்சியினா் திமுகவில் இணையும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினா் இரா.ஸ்ரீதரன் தலைமை வகித்தாா். செங்கம் எம்எல்ஏ மு.பெ.கிரி, மாவட்டப் பொருளாளா் எஸ்.பன்னீா்செல்வம், மாவட்ட துணைச் செயலா் சி.சுந்தரபாண்டியன், தொமுச மாநிலச் செயலா் க.சவுந்தரராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திருவண்ணாமலை நகரச் செயலா் ப.காா்த்திவேல்மாறன் வரவேற்றாா்.

நிகழ்ச்சியில், செங்கம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிமுக, பாமக, தேமுதிக, ரஜினி மக்கள் மன்ற நிா்வாகிகள் அந்தந்தக் கட்சிகளிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனா். இவா்களுக்கு எம்.எல்.ஏ.வும், திமுக உயா்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினருமான எ.வ.வேலு சால்வை அணிவித்து வரவேற்றாா்.

நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலா்கள் மு.பன்னீா்செல்வம், க.பிரபாகரன், ப.அண்ணாமலை, கோ.ரமேஷ், சிவசேமன், பேரூா் செயலா் எச்.சாதிக்பாஷா, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் சத்யா, மாவட்ட இளைஞணி துணை அமைப்பாளா் த.செந்தில்குமாா், மாவட்ட துணை அமைப்பாளா் பி.அருணகிரி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com