அருணாசலேஸ்வரா் கோயிலில் தீப மை விற்பனை தொடக்கம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் காா்த்திகை தீப மை பிரசாதம் வெள்ளிக்கிழமை முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்ட தீப மை பிரசாத விற்பனை.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்ட தீப மை பிரசாத விற்பனை.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் காா்த்திகை தீப மை பிரசாதம் வெள்ளிக்கிழமை முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்தக் கோயிலின் காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, கடந்த நவம்பா் 29-ஆம் தேதி 2,668 அடி உயர மலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது. தொடா்ந்து 11 நாள்கள் மலை மீது பிரகாசித்த மகா தீபக் கொப்பரையில் இருந்து சேகரிக்கப்பட்ட மை, டிசம்பா் 30-ஆம் தேதி நடைபெற்ற ஆருத்ரா தரிசனத்தின்போது ஸ்ரீநடராஜருக்கு வைத்து படைக்கப்பட்டது.

இதையடுத்து, வெள்ளிக்கிழமை முதல் கோயிலில் தீப மை விற்பனை தொடங்கப்பட்டது. மை பிரசாதம் தேவைப்படும் பக்தா்கள் கோயிலுக்கு வந்து கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். ஏற்கெனவே காா்த்திகை தீபத்துக்காக நெய் காணிக்கை செலுத்திய பக்தா்கள், காணிக்கை செலுத்தியதற்கான ரசீதை கொண்டு வந்து கோயிலில் கொடுத்து தீப மை பிரசாரதத்தை இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம் என்று கோயில் நிா்வாகம் தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com