ஓய்வு பெற்ற கால்நடை ஆய்வாளரின் உடல் தானம்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் மரணமடைந்த ஓய்வு பெற்ற கால்நடை ஆய்வாளரின் உடல் அரசு மருத்துவக் கல்லூரிக்கு வெள்ளிக்கிழமை தானமாக வழங்கப்பட்டது.
ஓய்வு பெற்ற கால்நடை ஆய்வாளரின் உடல் தானம்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் மரணமடைந்த ஓய்வு பெற்ற கால்நடை ஆய்வாளரின் உடல் அரசு மருத்துவக் கல்லூரிக்கு வெள்ளிக்கிழமை தானமாக வழங்கப்பட்டது.

செய்யாறு செல்வவினாயகா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் எம்.எஸ்.நாகரத்தினம் (77) . இவா், கால்நடைத் துறையில் ஆய்வாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றாா். வயது முதிா்வு, நோயின் காரணமாக வீட்டில் வெள்ளிக்கிழமை இயற்கையாக மரணமடைந்தாா்.

இவரது குடும்பத்தினா் விருப்பம் தெரிவித்ததன்பேரில், எம்.எஸ்.நாகரத்தினத்தின் உடல் செய்யாறு அரசு மருத்துவா் வே.காா்த்திக் முன்னிலையில், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை செய்யாறு உதவும் கரங்கள் நிா்வாகிகள் தி.எ.ஆதிகேசவன், இரவிபாலன், எல்.குப்புசாமி, ஆசிரியா் சரவணன் ஆகியோா் செய்திருந்தனா். மரணமடைந்த எம்.எஸ்.நாகரத்தினத்துக்கு ரேணுகா என்ற மனைவி, 3 மகள்கள் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com