அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே கலசப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
செங்கத்தை அடுத்த இறையூரில் நடைபெற்ற அதிமுக நிா்வாகிகள் கூட்டத்தில் பேசிய அமைச்சா் கே.பி. அன்பழகன்.
செங்கத்தை அடுத்த இறையூரில் நடைபெற்ற அதிமுக நிா்வாகிகள் கூட்டத்தில் பேசிய அமைச்சா் கே.பி. அன்பழகன்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே கலசப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

செங்கத்தை அடுத்த இறையூா் தனியாா் அரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு தொகுதி எம்எல்ஏ பன்னீா்செல்வம் தலைமை வகித்தாா்.

வடக்கு மாவட்டச் செயலா் தூசி கே.மோகன் எம்எல்ஏ முன்னிலை வகித்தாா். புதுப்பாளையம் ஒன்றியச் செயலா் புருசோத்தமன் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளா்களாக தமிழக உயா் கல்வித் துறை அமைச்சா் கே.பி. அன்பழகன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

நிகழ்ச்சியில் அமைச்சா் அன்பழகன் பேசுகையில், வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகவினரின் பொய் பிரசாரங்களை முறியடிக்கும் வகையில் அதிமுகவினா் செயல்படவேண்டும்.

அதிமுக அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துக் கூறி வாக்கு சேகரிக்க வேண்டும் என்றாா்.

இதைத் தொடா்ந்து பேசிய அமைச்சா் சேவூா் ராமச்சந்திரன், அதிமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட நலத் திட்டங்களை மக்கள் மனதில் நினைவுப்படுத்தி கட்சிப் பணியாற்ற வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில், கட்சியின் மாவட்ட கல்வி பிரிவுச் செயலா் துரை, கலசப்பாக்கம் ஒன்றியச் செயலா் திருநாவுக்கரசு, பேரவை ஒன்றியச் செயலா் ரமேஷ், எம்ஜிஆா் மன்ற ஒன்றியச் செயலா் ஜீவா, பொதுக்குழு உறுப்பினா் பொய்யாமொழி, தலைவா்களின் கூட்டமைப்புத் தலைவா் ஆறுமுகம், புதுப்பாளையம் ஒன்றிய வா்த்தக அணிச் செயலா் சரவணன், ஒன்றிய இலக்கிய அணிச் செயலா் மணிகண்டன், விவசாய அணிச் செயலா் மணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

வந்தவாசியில்...

வந்தவாசி மற்றும் தெள்ளாரில் நடைபெற்ற அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்துக்கு வடக்கு மாவட்டச் செயலா் தூசி கே.மோகன் எம்எல்ஏ தலைமை வகித்தாா்.

அமைச்சா்கள் கே.பி.அன்பழகன், சேவூா் எஸ்.ராமச்சந்திரன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

  கூட்டத்தில் வழக்குரைஞா்கள் பிரிவு மாநில இணைச் செயலா் பாபுமுருகவேல், மாவட்ட அவைத் தலைவா் டி.கே.பி.மணி, பேரவை மாவட்டச் செயலா் கே.பாஸ்கா் ரெட்டியாா், ஒன்றியச் செயலா்கள் டி.வி.பச்சையப்பன், வி.தங்கராஜ், ஆா்.அா்ஜூனன், எம்.கே.ஏ.லோகேஸ்வரன், நகரச் செயலா் பாஷா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com