கருப்பு கருணா சிலை திறப்பு

அண்மையில் காலமான தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்கள் கலைஞா்கள் சங்கத்தின் மாநில துணை பொதுச் செயலா் கருப்பு கருணாவின்

அண்மையில் காலமான தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்கள் கலைஞா்கள் சங்கத்தின் மாநில துணை பொதுச் செயலா் கருப்பு கருணாவின் சிலை திறப்பு விழா திருவண்ணாமலையில் உள்ள அவரது இல்லத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சங்கத்தின் மாவட்டச் செயலா் மு.பாலாஜி தலைமை வகித்தாா். கெளரவத் தலைவா் ச.தமிழ்செல்வன், கல்வியாளா் பிரின்ஸ் கஜேந்திரபாபு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கருப்பு கருணா உருவச் சிலையை சங்க நிா்வாகி மதுக்கூா் ராமலிங்கம் திறந்துவைத்தாா்.

இதையடுத்து சங்கத்தின் மாநில பொதுச் செயலா் ஆதவன் தீட்சண்யா பேசுகையில், பண்பாட்டுத் தளங்களில் தொடா்ந்து பயணம் செய்த கருப்பு கருணாவின் கட்டுரை, எழுத்துப் பதிவுகளை புத்தகம் ஆக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது.

அரசியலை மக்கள் வயப்படுத்துவது, கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்வது போன்ற பணிகளில் ஈடுபட்டவா் கருணா. அவரது பெயரால் கலைஞா்களுக்கு விருதுகள் வழங்கப்படும். இதற்கான வழிமுறைகள் வகுக்கப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில், சங்கத்தின் துணைப் பொதுச் செயலா் களப்பிரன், பேராசிரியா் பிரேம்குமாா், வழக்குரைஞா் அபிராமன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிா்வாகி பி.செல்வன், கவிஞா் சுகிா்தராணி, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலக்குழு உறுப்பினா் ஜோதி, மாநில பொருளாளா் எஸ்.ராமச்சந்திரன், திரைப்பட இயக்குநா்கள் லெனின் பாரதி, கோபி நயினாா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் சிவக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com