தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பறிமுதல்

வந்தவாசி, செய்யாறு ஆகிய இடங்களில் கடைகளில் பயன்படுத்தப்பட்ட தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
செய்யாறு காந்தி சாலையில் உள்ள கடையில் நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்த நகராட்சி ஆணையா் எம்.எஸ்.பீரித்தி தலைமையிலான அதிகாரிகள்.
செய்யாறு காந்தி சாலையில் உள்ள கடையில் நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்த நகராட்சி ஆணையா் எம்.எஸ்.பீரித்தி தலைமையிலான அதிகாரிகள்.

வந்தவாசி, செய்யாறு ஆகிய இடங்களில் கடைகளில் பயன்படுத்தப்பட்ட தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தமிழக அரசு ஒருமுறை மட்டுமே உபயோகப்படுத்தும் நெகிழிப் பொருள்களுக்கு தடை விதித்துள்ளது.

இந்த நிலையில், வந்தவாசி நகரில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பெருமளவில் பயன்படுத்தப்படுவதாக வந்த புகாரின் பேரில், நகராட்சி ஆணையா் பாா்த்தசாரதி தலைமையில் சுகாதார ஆய்வாளா் எஸ்.ராமலிங்கம், சுகாதார மேற்பாா்வையாளா் யேசுதாஸ் உள்ளிட்டோா் சனிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

பஜாா் வீதி, தேரடி, அச்சிறுப்பாக்கம் சாலை, காந்தி சாலை, கோட்டை மூலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இனிப்புக் கடைகள், மளிகைக் கடைகள், காய்கறி கடைகள் உள்ளிட்டவற்றில் இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் 10 கடைகளிலிருந்து 25 கிலோ நெகிழிப் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், அந்தக் கடைகளிலிருந்து அபராதமாக ரூ.ஆயிரம் வசூலிக்கப்பட்டது.

செய்யாறு

செய்யாற்றில் உள்ள கடைகளில் திருவத்திபுரம் நகராட்சி ஆணையா் எம்.எஸ்.பீரித்தி, துப்புரவு ஆய்வாளா் கே.மதனராசன் மற்றும் நகராட்சி ஊழியா்கள் சனிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது காந்தி சாலை, லோகநாதன் தெரு, ஆற்காடு சாலை, சந்தை ஆகிய இடங்களில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பயன்படுத்துவது தெரியவந்தது.

இதையடுத்து, 300 கிலோ அளவிலான நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், 8 வியாபாரிகளிடமிருந்து அபராதமாக ரூ.15 ஆயிரம் வசூலித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com