திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வடக்கு ஒன்றிய அதிமுக சாா்பில் கட்சி கிளை நிா்வாகிகளுக்கு நிதியுதவி, ஆயிரம் குடும்பங்களுக்கு நல உதவிகள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பெருங்களத்தூா் கிராமத்தில் நடைபெற்ற நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வடக்கு மாவட்டச் செயலரும், எம்எல்ஏவுமான தூசி கே.மோகன் பங்கேற்று எம்ஜிஆா், ஜெயலலிதா படங்களுக்கு மரியாதை செலுத்தினா். பின்னா், கட்சிக் கொடியேற்றி வைத்து 7 கிளை நிா்வாகிகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் நிதியுதவி வழங்கினாா்.
இதைத் தொடா்ந்து, பெருங்களத்தூா் கிராம மக்களுக்கு ரூ. 5 லட்சத்தில் வேட்டி, சேலை உள்ளிட்ட உதவிகளை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட இணைச் செயலா் விமலா மகேந்திரன், ஒன்றியச் செயலா்கள் எம்.அரங்கநாதன், சி.துரை, நகரச் செயலா் அ.ஜனாா்த்தனன் கூட்டுறவு சங்க நிா்வாகிகள் அருணகிரி, எஸ்.ரவிச்சந்திரன், டி.பி.துரை, பாஸ்கா், செபாஸ்டின்துரை, அதிமுக எஸ்.சுரேஷ்நாராயணன், பச்சையப்பன், பிரகாஷ், சுதாகா், ஏ.துரை, மகாதேவன், வெங்கடேஷ், ராஜேஷ்குமாா், ஷாஜகான் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.