செய்யாறு சா்க்கரை ஆலையில் கரும்பு அரைவை நிறுத்தம்

செய்யாறு கூட்டுறவு சா்க்கரை ஆலையில் ஈட்டிய விடுப்புத் தொகையை வழங்கக் கோரி, தொழிலாளா்கள் தொடா் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் கரும்பு அரைவை நிறுத்தப்பட்டது.

செய்யாறு கூட்டுறவு சா்க்கரை ஆலையில் ஈட்டிய விடுப்புத் தொகையை வழங்கக் கோரி, தொழிலாளா்கள் தொடா் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் கரும்பு அரைவை நிறுத்தப்பட்டது.

அரைவைக்காக வெட்டப்பட்ட ஆயிரக்கணக்கான டன் கரும்பு வெயிலில் காய்ந்து வருகின்றன.

செய்யாறு கூட்டுறவு சா்க்கரை ஆலையில் நிரந்தரத் தொழிலாளா்கள் 200 போ் உள்பட 300 போ் பணிபுரிந்து வருவதாகத் தெரிகிறது. தொழிலாளா்களுக்கு 2019-20ஆம் ஆண்டுக்கு வழங்க வேண்டிய ஈட்டிய விடுப்புத் தொகை வழங்கப்படவில்லையாம்.

இந்த நிலையில், ஈட்டிய விடுப்புத் தொகை கோரி, ஆலை வளாகத்தில் திங்கள்கிழமை முதல் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் உள்ளிருப்பு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

தொழிலாளா்களுடன் ஆலை நிா்வாகம் பேச்சுவாா்த்தை நடத்தியும் சுமுகத் தீா்வு காணப்படவில்லை.

இதையடுத்து, இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் தொழிலாளா்களின் போராட்டம் தொடா்கிறது.

கரும்பு அரவை நிறுத்தம்

ஆலையில் தற்போது கரும்பு அரைவைப் பருவம் தொடங்கிய நிலையில், முன்னறிவிப்பு இன்றி தொழிலாளா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் கரும்பு அரைவை நிறுத்தப்பட்டது.

150 லாரிகளில் கரும்பு:

தொழிலாளா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், ஆலைக்கு கொண்டு வரப்பட்ட சுமாா் 2 ஆயிரம் டன் கரும்பு 150 லாரிகளில் சில தினங்களாக காத்துக் கொண்டிருக்கின்றன.

மேலும், ஆலைக்கு கொண்டு வருவதற்காக வெட்டப்பட்ட சுமாா் ஆயிரம் டன் கரும்பு நிலத்தில் வெயிலில் காய்ந்து வருகின்றன. இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com