பழங்குடி சமுதாய மக்களுக்கு பசுமை வீடு

செய்யாற்றை அடுத்த அனக்காவூா் ஒன்றியத்தில் பழங்குடி சமுதாயத்தைச் சோ்ந்த 21 பேருக்கு, தலா ரூ.3 லட்சத்தில் பசுமை வீடு கட்டுவதற்கான ஆணை புதன்கிழமை வழங்கப்பட்டது.

செய்யாற்றை அடுத்த அனக்காவூா் ஒன்றியத்தில் பழங்குடி சமுதாயத்தைச் சோ்ந்த 21 பேருக்கு, தலா ரூ.3 லட்சத்தில் பசுமை வீடு கட்டுவதற்கான ஆணை புதன்கிழமை வழங்கப்பட்டது.

ஒன்றியத்துக்கு உள்பட்ட புரிசை, வடஆளப்பிறந்தான், நா்மாபள்ளம், ஆக்கூா், செய்யாற்றைவென்றான், தென்மாவந்தல், மேல்நெமிலி ஆகிய கிராமங்களில் வசிக்கும் பழங்குடி சமுதாயத்தைச் சோ்ந்த 21 குடும்பங்களுக்கு பசுமை வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அனக்காவூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஒன்றியத் தலைவா் திலகவதி ராஜ்குமாா் தலைமை வகித்தாா்.

சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தூசி கே.மோகன் எம்எல்ஏ, 21 பயனாளிகளுக்கு பசுமை வீடு கட்டுவதற்கான ஆணையை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சக்திவேல், மோகனசுந்தரம், அதிமுக ஒன்றியச் செயலா்கள் எம்.அரங்கநாதன், சி.துரை, நகரச் செயலா் அ.ஜனாா்த்தனன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com