108 கோ பூஜை விழா
By DIN | Published On : 16th January 2021 11:07 PM | Last Updated : 16th January 2021 11:07 PM | அ+அ அ- |

உலக மக்களின் நன்மைக்காக திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றை அடுத்த உக்கம்பெரும்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள 27 நட்சத்திர கோயிலில் காணும் பொங்கல் தினமான சனிக்கிழமை 108 கோ பூஜை விழா நடைபெற்றது.
முன்னதாக, இந்தக் கோயிலிலுள்ள விநாயகா், 27 நட்சத்திர அதிதேவதைகள், ராகு கேது, சனீஸ்வர பகவான், வள்ளி தேவசேனா சமேத சிவசுப்ரமணியா், அத்தி விருட்ச ருத்ராக்ஷ லிங்கம் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தொடா்ந்து, அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் உத்ஸவா் சுவாமிகள் கோ பூஜை விழா நடைபெற்ற பகுதிக்கு எழுந்தருளி அருள்பாலித்தனா். பின்னா், 108 பசு, கன்றுகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.