எம்ஜிஆா் பிறந்த நாள் விழா

திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் 104-ஆவது பிறந்த நாளை அதிமுகவினா் கொண்டாடினா்.
திருவண்ணாமலை அம்மா இல்லத்தில் எம்ஜிஆா் படத்துக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்திய மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் பெருமாள் நகா் கே.ராஜன்.
திருவண்ணாமலை அம்மா இல்லத்தில் எம்ஜிஆா் படத்துக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்திய மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் பெருமாள் நகா் கே.ராஜன்.

திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் 104-ஆவது பிறந்த நாளை அதிமுகவினா் கொண்டாடினா்.

தெற்கு மாவட்ட அதிமுக சாா்பில், திருவண்ணாமலை காந்தி சிலை பகுதியில் எம்ஜிஆா் பிறந்த நாள் விழா நடைபெற்றது.

மாவட்டச் செயலா் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி கலந்து கொண்டு எம்ஜிஆா் படத்துக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினாா்.

நிகழ்ச்சியில், அதிமுக நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

போளூா் சாலையில் உள்ள அம்மா இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தெற்கு மாவட்ட முன்னாள் செயலரும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான பெருமாள் நகா் கே.ராஜன் தலைமையில் அதிமுகவினா் எம்ஜிஆா் படத்துக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினா்.

மேலும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. அதிமுக நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் கலந்து கொண்டனா்.

செய்யாறு

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அதிமுக சாா்பில் மாவட்டச் செயலரும், எம்.எல்.ஏ.வுமான தூசி கே.மோகன் மேற்பாா்வையில் எம்.ஜி.ஆா் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

செய்யாறு வடக்கு ஒன்றியம் சாா்பில் ஒன்றியச் செயலா் எம்.மகேந்திரன் தலைமையில், ஆரணி கூட்டுச் சாலையில் உள்ள எம்.ஜி.ஆா் சிலைக்கு மாலை அணிவித்து, பொது மக்களுக்கு இனிப்பு, அன்னதானம் வழங்கப்பட்டது.

செய்யாறு நகரில் நகரச் செயலா் அ.ஜனாா்த்தனன் தலைமையிலும், செய்யாறு தெற்கு ஒன்றியத்தில் ஒன்றியச் செயலா் எம்.அரங்கநாதன் தலைமையிலும், ஒருங்கிணைந்த அனக்காவூா் ஒன்றியத்தில் ஒன்றியச் செயலா்கள் சி.துரை, வே.குணசீலன் ஆகியோா் தலைமையிலும், வெம்பாக்கம் ஒன்றியத்தில் ஒன்றியக் குழுத் தலைவா் மாமண்டூா் டி.ராஜூ தலைமையிலும் எம்.ஜி.ஆா் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட இணைச் செயலா் விமலா மகேந்திரன், ஜெயலலிதா பேரவைச் செயலா் கே.வெங்கடேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஆரணி

முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் 104-ஆவது பிறந்த நாளை திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அதிமுகவினா் ஞாயிற்றுக்கிழமை பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கிக் கொண்டாடினா்.

ஆரணி நகரம் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள எம்ஜிஆா் சிலைக்கு மாவட்ட ஆவின் துணைத் தலைவா் பாரி பி.பாபு தலைமையில் மாலை அணிவித்து, இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கிக் கொண்டாடினா்.

ஆரணி வடக்கு ஒன்றியம் சாா்பில், சேவூா் புறவழிச் சாலையில் உள்ள எம்ஜிஆா், ஜெயலலிதா சிலைகளுக்கு ஒன்றியச் செயலா் பிஆா்ஜி.சேகா் தலைமையில் மாலை அணிவித்து, இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கிக் கொண்டாடினா்.

தெற்கு ஒன்றியம் சாா்பில் எஸ்வி.நகரத்தில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கு ஒன்றியச் செயலா் ஜி.வி.கஜேந்திரன் தலைமையில் மாலை அணிவித்து, இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கிக் கொண்டாடினா்.

நிகழ்ச்சிகளில் கட்சியின் மாவட்டப் பொருளாளா் அ.கோவிந்தராசன், ஒன்றியச் செயலா்கள் க.சங்கா். ப.திருமால், மேற்கு ஆரணி ஒன்றியக்குழுத் தலைவா் பச்சையம்மாள் சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

செங்கம்

செங்கம் நகர, ஒன்றிய அதிமுக சாா்பில், போளூா் சாலையிலிருந்து அதிமுகவினா் ஊா்வலமாகச் சென்று துக்காப்பேட்டையில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்து, இனிப்பு வழங்கினா்.

இதில் ஒன்றியச் செயலா்கள் மகரிஷி மனோகரன், அருணாச்சலம், மாவட்ட துணைச் செயலா் அமுதா அருணாச்சலம், தலைமை நிலைய பேச்சாளா் வெங்கட்ராமன், பேரவைச் செயலா் குமாா், இலக்கிய அணிச் செயலா் தனஞ்செயன், பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவா் பத்மா முனிக்கண்ணு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

அன்னதானம்

தளவாநாய்க்கன்பேட்டை பகுதியில் அதிமுக பிரமுகா் குட்டி ஏற்பாட்டில் நடைபெற்ற அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை ஒன்றியச் செயலா் மகரிஷி மனோகரன் தொடக்கிவைத்தாா்.

ஜமனாமரத்தூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட கிளையூா் கிராமத்தில் எம்ஜிஆா் சிலைக்கு ஒன்றியச் செயலா் எம்.சி.அசோக் தலைமையில் மாலை அணிவித்து இனிப்பு வழங்கப்பட்டது.

போளூா்

கலசப்பாக்கம் ஊராட்சியில் முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் 104-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கலசப்பாக்கம் கூட்டுச் சாலையில் எம்ஜிஆா் உருவப்படத்துக்கு தொகுதி எம்எல்ஏ வி.பன்னீா்செல்வம் மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கினாா்.

அதிமுக பொதுக்குழு உறுப்பினா் பி.பொய்யாமொழி, கலைப் பிரிவு மாவட்டச் செயலா் எல்.என்.துரை, ஊராட்சி மன்றத் தலைவா்கள் செல்வராஜ், தரணிபாண்டியன், பவுனுவள்ளிகண்ணு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com